25.7 C
Jaffna
December 12, 2024
Pagetamil
இலங்கை

புதுக்குடியிருப்பு குடிநீர் திட்டம்: மல்லிகைத்தீவு ஆழ்துளை கிணற்றிற்கு மாற்றுவழி தேட ஆலோசனை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மல்லிகைத்தீவு கிராமத்தில் 2018ம் ஆண்டு உலக வங்கியின் நிதிப் பங்களிப்புடன் புதுக்குடியிருப்பு பிரதேசச் செயலகப் பிரிவிற்குட்பட்ட நான்கு கிராம சேவையாளர் பிரிவுகளுக்கு நீர் விநியோகம் செய்வதற்காக குடிநீர் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டது.

இந்த திட்டத்தில் மல்லிகைத்தீவு கிராமத்தில் 3 ஆழ்துளை கிணறுகள் தோண்டப்பட்டதோடு குறித்த கிராமத்தில் பாரிய நீர்த்தாங்கி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கிணறுகளினால் மல்லிகைத்தீவு பகுதியில் நிலக்கீழ் நீர் வெகுவாக பாதிப்படைவதாகவும் தமது சுய தேவைக்காக நீரை எதிர் காலத்தில் பெற்றுக் கொள்ள பாரிய பிரச்சினைகள் ஏற்படும் என கோரிக்கை ஒன்றை முன்வைத்து அதற்கு எதிராக குரல்கொடுத்து வந்தனர்.

2018 முதல் தமது எதிர்ப்பினை மல்லிகைத்தீவு பொது அமைப்புக்கள் வெளியிட்டபோதும் அவர்கள் குறித்த திட்டத்தை எதிர்க்கவில்லை எனவும் தமது கிராமத்தில் அமைக்கப்பட்ட குழாய்க்கிணற்றில் இருந்து நீரை பெறாது வேறு இடத்திலிருந்து நீரை பெருமாறும் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் மக்களின் எதிர்ப்பையும் மீறி நீர்த்தாங்கி அமைக்கும் பணிகள் நிறைவடைந்ததும் குறித்த குழாய்க்கிணறுகளில் இருந்து நீர் எடுப்பதற்காக அனைத்து வேலைகளும் நிறைவடைந்துள்ளது.

தொடர்ச்சியாக அபிவிருத்திக்குழு கூட்டங்களில் குறித்த விடயமாக கலந்துரையாடி பல்வேறு வகைகளில் மக்கள் போராடியபோதும் தீர்வில்லாத நிலையில் அதற்கான தீர்க்கமானதொரு தீர்வைப் பெற்றுத் தருமாறு 02-03-2021இடம் பெற்ற புதுக்குடியிருப்பு பிரதேச செயலக அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து அதற்கான தீர்வு ஒன்றைப் பெற்றுக் கொடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் ஒன்று நேற்று(5) வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான் அவர்களின் தலைமையில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகாரதலிங்கம், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் திரு.ஜெயகாந்தன், முல்லைத்தீவு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திரு.கிருபாசுதன், புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் ஆ.தவக்குமார், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்களான ஆ.புவனேஸ்வரன் து.ரவிகரன் ஆகியோரின் பங்கேற்புடன் இடம்பெற்ற குறித்த ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் இரு தரப்பினர்களுக்கும் இடையே ஒருமித்த சமரசத் தன்மையின்மையினால் இறுதியில் நீர்வங்கள் வடிகால் அமைப்பு சபையின் இந்த நடவடிக்கையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தமது கிராமத்தில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகளில் இருந்து நீரை பெற்றுக்கொள்ள முடியாது எனவும் நீரை பெற்றுக்கொள்ள மாற்றுவழியை தேடுமாறும் மக்கள் உறுதியாக தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்த கிணற்றிலிருந்து நீர் எடுக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மாற்றுவழியூடாக நீரை பெற்றுக்கொள்ள ஏற்ற நடவடிக்கைகளுக்கு செல்லுமாறு நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு தெரிவிக்கப்பட்டது. அதற்கான நிதிகளை பெற்றுக்கொள்ள உரிய அமைச்சர்களுடன் பேசி நடவடிக்கைகளை மேற்கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அரிசி இறக்குமதியில் நெருக்கடி

east pagetamil

கடந்த வருடம் எலிக்காய்ச்சலால் 200 பேர் உயிரிழப்பு!

Pagetamil

இன்றைய வானிலை

Pagetamil

2024 வாக்காளர் பதிவின் அடிப்படையிலேயே உள்ளூராட்சித் தேர்தல்

Pagetamil

ரௌடியை போல நடந்த அர்ச்சுனா: அதிர்ச்சி வீடியோ!

Pagetamil

Leave a Comment