பிபிசி தமிழ் இணையத்தளத்தின் இலங்கை செய்தியாளர் ரஞ்சன் அருண் பிரசாத் வீட்டிற்கு சென்ற அநாமதேய நபர்கள், அவரைப் பற்றி விசாரணை நடத்தியுள்ளனர்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வுகள் நடந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில், வடக்கிற்கு பயணித்து பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துக்களை பதிவு செய்துகொண்டு திரும்பிய பின்னர் இந்த சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இறக்குவாணையிலுள்ள அவரது வீட்டிற்கு ஒரு குழுவினர் இரண்டு முறை சென்று, அவரைப்பற்றி விசாரித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர், மார்ச் 2 ம் திகதி, ஊடகவியலாளர் கண்டியில் தங்கியிருந்த உறவினர் வீட்டிற்கு வந்த இரண்டு பேர், அவரது தொலைபேசி எண் மற்றும் பின்னர் அவரது வேலை குறித்து விசாரித்தனர். அவரது சம்பளம் குறித்தும் கேள்வியெழுப்பியுள்ளனர்.
இது குறித்து ரஞ்சன் அருண் பிரசாத், பொலிஸ் தலைமையகத்தில் முறையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.