சமூக செயற்பாட்டாளரும் இலங்கைத் தமிழரசுக்கட்சி பிரமுகருமாகிய அ.ஜெ. பீற்றர் இளஞ்செழியனை விசாரணை ஒன்றுக்கு வருமாறு தொலைபேசி ஊடக முல்லைத்தீவு பொலிஸார் அழைத்துள்ளனர்.
02.03.2021 அன்று முல்லைத்தீவு கள்ளப்பாடு தெற்கு கண்ணகியம்மன் மீனவசங்கத்தை சேர்ந்த மீனவர்களை மீன்பிடிக்க செல்லக்கூடாது எனவும் படகுகளையும், இயந்திரங்களையும் வலைகளையும் தான் ஏற்றி செல்வேன் என அச்சுறுத்திய கடற்றொழில் பரிசோதகரிடம் மீனவர்களுக்காய் போராடி மீனவர்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியிருந்த நிலையில் 03.03.2021 அன்று சமூக செயற்பாட்டாளரும் இலங்கைத் தமிழரசுக்கட்சி பிரமுகருமாகிய அ.ஜெ. பீற்றர் இளஞ்செழியனுக்கு எதிராக முல்லைத்தீவு பொலிஸில் கடற்றொழில் பரிசோதகர் முறைபாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
அது தொடர்பாக வாக்குமூலம் ஒன்றை பெற்றுகொள்ளவும் விசாரணை ஒன்றை மேற்கொள்ளவும் 06.03.2021(சனிக்கிழமை) காலை 10 மணிக்கு முல்லைத்தீவு பொலிஸ்நிலையத்துக்கு வருமாறு பொலிசார் அழைத்துள்ளனர்.
இது தொடர்பாக சமூக செயற்பாட்டாளரும் இலங்கைத் தமிழரசுக்கட்சி பிரமுகருமாகிய அ.ஜெ. பீற்றர் இளஞ்செழியன் கருத்து தெரிவிக்கையில்-
மீனவர்களை மீன்பிடிக்க செல்லக்கூடாது என தெரிவித்த போது அதை எழுத்து மூலம் கோரியது குற்றமா?, கபடத்தனமான கடற்கரையை அளவீடு செய்வதை நிறுத்த கோரியது குற்றமா?, பிரதேச செயலகத்தின் காணிப்பிரிவு, நிலவளவை திணைக்களம் நீரியல் திணைக்கள உயர் அதிகாரிகள் இன்றி அவர்களது அனுமதி இன்றி கடற்றொழில் பரிசோதகர் திரு. தனபாலன், முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் தலைவர் ஜோன்சன் ஆகியோர் அளவீடு செய்ய அதற்கான அனுமதி கடிதம் உண்டா என வினாவியது குற்றமா?, கடற்கரையை அளவீடு செய்ய அனுமதி கொடுத்தது யார் என வினாவியது குற்றமா?, அல்லது மீனவ சமுதாயத்துக்கு குரல் கொடுத்தது குற்றமா? என கேள்வி எழுப்பியதுடன் என் மேலோ மக்கள் மேலோ போலியான வழக்குகளை பதிவு செய்து அடக்க நினைத்தாலும் அதையும் உடைத்தெறிந்து மக்களுடைய உரிமைக்காக தொடர்ந்தும் குரல்கொடுப்போம். எனக்கு மேல் சுமத்தப்பட்ட பொய் குற்றசாட்டு என்பதை நீதேவதையின் முன் நிருபிப்போம். மக்கள் பணி தொடரும் என்றார்.