Site icon Pagetamil

ஐ.நாவில் அரசுக்கு ஆதரவு: யாழில் இராணுவத்தின் ஏற்பாட்டில் இன்று கூட்டம்!

இராணுவத்தின் ஏற்பாட்டில் சுன்னாகம் சபாபதிப்பிள்ளை முகாமில் அரசுக்கு ஆதரவான பெரும் பொதுக்கூட்டமொன்று இன்று (6) இடம்பெறவுள்ளது.

முன்னாள் ரௌடிகள் உள்ளிட்ட சிலர் இராணுவத்தின் ஏற்பாட்டில் தெய்வேந்திரமுனையிலிருந்து பருத்தித்துறை வரை நடந்து வருவதாக கூறி, திடுதிப்பென யாழ்ப்பாணத்திற்குள் நுழைந்தார்கள்.

இந்த பேரணிக்காக வறுமையான, பின்தங்கிய பிரதேசங்களில் நிவாரணம், பணம் தருவதாக கூறி பேருந்துகளில் அழைத்து சென்றனர்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கோட்டா அரசு மீது நடவடிக்கையெடுக்கக்கூடாது, தமிழ் தரப்பினர் மீதே நடவடிக்கையெடுக்க வேண்டுமென கோசமிட வேண்டுமென கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிற்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்த குழுவை முன்னிலைப்படுத்தியே இன்று நிகழ்வு நடக்கவுள்ளது. பின்தங்கிய, வறுமையான பகுதிகளிலிருந்து 1,000 பேரை திரட்டுவதென ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

தமிழ் மக்களின் அரசியலுரிமையை வலியுறுத்தி சில பத்து பேரை திரட்டினாலே, நீதிமன்ற தடையுத்தரவை பெறும் பொலிசார், இந்த நிகழ்வை கண்டும் காணாமலும் விடுகிறார்கள் என்றாலே இதன் பின்னணியை ஊகிக்க முடியும் என சமூக வலைத்தளங்களில் விமர்சனம் கிளம்பியுள்ளது.

Exit mobile version