இரண்டு பலநாள் மீன்பிடி படகுகளில் சர்வதேச கடல் எல்லைக்கு மீன்பிடிக்க சென்ற சிலாபத்தை சேர்ந்த 13 பேரை இந்திய கடலோர காவல்படை கைது செய்துள்ளதாக, பலநாள் மீன்பிடி படகுகள் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
பல வாரங்களுக்கு முன்பு நீர்கொழும்பு துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற சதுரனி 8 மற்றும் சதுரனி 3 ஆகிய இரண்டு படகுகளும் இந்திய கடலோர காவல்படையால் புதன்கிழமை கைப்பற்றப்பட்டன.