யாழ் நகர பாடசாலையொன்றின் உடற்கல்வி ஆசிரியர் மீது இனம்தெரியாத நபர்கள் வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
நேற்று முன்தினம் வியாழக்கிழமை (4) மாலை இந்த சம்பவம் நடந்தது.
இரவு 9.30 மணியளவில் மல்லாகம் பகுதியில் ஏற்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து காயமடைந்த ஆசிரியர், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
மோட்டார் சைக்கிள்களில் வந்த ஐந்து பேர் கொண்ட குழு ஆசிரியரை வெட்டியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
தாக்குதலுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. தெல்லிப்பளை பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1