வடக்கில் இன்று 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இன்று அடையாளம் காணப்பட்டவர்களில் 8 பேர் யாழ் மாவட்டத்தையும், 12 பேர் மன்னார் மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள்.
யாழ் மாவட்டத்தில், ஊர்காவற்றுறை பகுதியில் 6 பேரும், அச்சுவேலியில் ஒருவரும், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வந்த ஒருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
அச்சுவேலியில் அடையாளம் காணப்பட்டவர், விசுவமடு பாடசாலையொன்றில் ஆசிரியையாவார். யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அடையாளம் காணப்பட்டவர் நவாலியை சேர்ந்த பெண்ணாவார்.
மன்னார் அடையாளம் காணப்பட்டவர்களில், நகரில் கொமர்ஷல் கிரெடிட் நிறுவனத்தின் ஊழியர்கள் 5 பேர், சலூன் ஊழியர்கள் 2 பேர், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், மாந்தை மேற்கில் 2 பேர், மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சைக்கு சென்ற வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்கள் இருவர் தொற்றிற்குள்ளாகினர்.