25 C
Jaffna
February 12, 2025
Pagetamil
கிழக்கு

முஸ்லிம்களின் ஆதரவுடன் முதலமைச்சராகலாமென்ற சாணக்கியனின் கனவு பலிக்காது!

சிறுபான்மையின மக்களின் ஏகோபித்த வாக்குகளால் கிழக்கு மாகாண சபையை கைப்பற்றி இழந்த அபிவிருத்தியை மேற்கொள்வதற்கு சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி தயாராக இருக்கின்றது. சாணக்கியனின் முதலமைச்சர் கனவு பலிக்காதென பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ப.சந்திரகுமார் தெரிவித்தார்.

நேற்று (4)மாவட்ட அலுவலகத்தில் வைத்து இவ்வாறு தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெற்றால் இப்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்துள்ள சாணக்கியன் சிறுபான்மையின முஸ்லிம் மக்களின் வாக்குகளினால் முதலமைச்சராவார் என்பது வாயால் வடை சுடும் நிலைப்பாடாகும். அது நடைபெறாது.

கிழக்கு மாகாண சபைத்தேர்தல் நடைபெற்றால் பொதுஜன பெரமுன கட்சி சிறுபான்மையின மக்களின் ஏகோபித்த வாக்குகளினால் கிழக்கு மாகாண சபையை கைப்பற்றி இழந்த அபிவிருத்தியை மேற்கொள்வதற்கு தயாராக இருக்கின்றது. தமிழர்களின் பூர்வீக பிரதேசம், பூர்வீக சொத்துக்களை,தமிழர்களின் அடிப்படை உரிமைகளை பொதுஜன பெரமுன கட்சியின் ஊடாக பாதுகாப்பதுதான் கிழக்கு தமிழர்களுக்கு நிரந்தர இருப்பாக இருக்கும்.

தமிழ்தேசிய தலைமைகள் கிழக்கு தமிழர்களின் தலைமைத்துவ இருப்பை பாதுகாக்காத காரணத்திலும், கிழக்கு பிரதேசத்தை சகோதர இனங்களுக்கு தாரைவார்த்து கொடுத்ததனாலும் கடந்த கிழக்கு மாகாண ஆட்சி தமிழர்களின் இருப்பு கேள்விக் குறியாகி இருந்தது.

இதனை ஆட்சிக்கு வந்த பொதுஜன பெரமுன கட்சி கிழக்கு தமிழர்களின் இருப்பை பாதுகாத்தது.

தமிழர்களால் உருவாக்கப்பட்ட கிழக்கு மாகாண சபையின் ஆட்சி அதிகாரங்கள் தமிழர்களின் கைகளில் இருந்து பறிக்கப்பட்டு சிறுபான்மையின மக்களினதும்,அரசியல்வாதிகளின் கைகளுக்கு சென்று கொண்டிருக்கையில் ஆட்சிக்கு வந்த எமது பொதுஜன பெரமுன அரசாங்கம் அதிர்ஷ்டவசமாக ஆட்சி அதிகாரங்களை பற்றிக் கொண்டது.

இதனால் கிழக்கு மாகாண தமிழ் மக்கள் காப்பாற்றப்பட்டார்கள்.

எமது ஆளும் கட்சியில் இரண்டு பேரை பாராளுமன்றம் அனுப்பியும், அமைச்சராக்கியும் தமிழர்களின் கைகளுக்கு இழந்த அபிவிருத்தியை பெற்றுக் கொடுத்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தென்னை மரத்தில் ஏறிய இளைஞன் தவறி விழுந்து உயிரிழப்பு

Pagetamil

சட்டவிரோதமாக வலம்புரி சங்குகள் விற்பனைக்கு முயற்சித்த மூவர் கைது

east tamil

குமாரபுரம் படுகொலைக்கு அனுரவிடம் கோரப்படும் நீதி

east tamil

திருகோணமலையில் விபத்து

east tamil

25 வருடங்களாக இலவசமாக கலை வளர்க்கும் முத்துக்குமார சுவாமி ஆலயம்

east tamil

Leave a Comment