இலங்கை

தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகளிற்கு பொதுமன்னிப்பு: சம்பிக்க வலியுறுத்தல்!

இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டள்ள முன்னாள் விடுதலைப் புலிகளின் போராளிகளிற்கு பொதுமன்னிப்பளிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க.

விடுதலைப் புலிகளின் தலைவர்களின் கட்டளையின்படியே அவர்கள் செயற்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

நேற்று நடந்த கலந்துரையாடல் ஒன்றில் இதனை தெரிித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் நிலைப்பாடுகளை உறுதிசெய்ய அரசாங்கம் முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும்.

இலங்கை மீது வாக்கெடுப்புடன் புதிய தீர்மானம் எடுக்கப்படும் வாய்ப்புள்ளது. அது விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது.

ஐ.நா அறிக்கை   2009 மே 18 ஆம் திகதி முடிவடைந்த மோதலில் கவனம் செலுத்தும். பெரும்பாலும் ஆயுதப்படைகளின் மனித உரிமை மீறல்கள் குறித்து கவனம் செலுத்தியது.

புலிகள் தலைவரான குமரன் பத்மநாதன் உட்பட 12,600 கைதிகள் விடுவிக்கப்பட்டதைப் போலவே,  கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விடுவிக்கப்பட வேண்டும். இதனை வெளிப்படையாக மேற்கொள்வதுடன், அவர்கள் சமூகத்தில் இணைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சவப்பெட்டிகளுடன் முள்ளிவாய்க்கால் சென்ற ஊர்தி

Pagetamil

கிளிநொச்சியில் வர்த்தக நிலையங்கள் பூட்டு

Pagetamil

30 வயதிற்குட்பட்ட 30 ஆசியா பட்டியலில் இலங்கை நடிகை

Pagetamil

மன்னாரில் அதானியின் காற்றாலை மின்திட்டம்: உயர் நீதிமன்றத்தில் சுற்றுச்சூழல் அமைப்பு மனு!

Pagetamil

மன்னார் ரின் மீன் தொழிற்சாலை மீதான குற்றச்சாட்டின் பின்னணி!

Pagetamil

Leave a Comment