26.2 C
Jaffna
November 29, 2023
இலங்கை

இரணைதீவு அடக்க முடிவை மீளப்பெற வேண்டும்: மாவை!

கொரோனாவினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்யும் அரசாங்கத்தின் முடிவை, இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா கண்டித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கையிலும் கொரோனா வைரஸ் தொடர்ந்து தீவிரமடைந்து பரவி வருகிறது. இதனிடையே கொரோனா வைரஸ் நோயினால் மரணமடைந்த முஸ்லீம் மக்களின் ஜனசாக்களை எங்கே அடக்கம் செய்வதென்பதில் மேலும் குழப்பமான இன மத முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதைக் கண்டிக்க வேண்டும்.

அரசு ஐ.நாவில் கூட முஸ்லீம்களின் ஜனசா அடக்கம் செய்யும் பிரச்சனை தீர்ந்து விட்டது. மனித உரிமைப் பேரவை அறிக்கையிலிருந்து இப்பிரச்சனையை நீக்கி விடுமாறு கோருகின்றது.

இக்கோரிக்கையானது மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கெதிராக முன்வைக்கப்பட்ட பிரேரணயில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்க முஸ்லீம் நாடுகளைக் கவருவதற்காகவேயாகும்.

இம் முயற்சியானது முஸ்லீம் மக்களையும், நாடுகளையும் ஏமாற்றும் முயற்சியேயாகும்.
கொரோனாவினால் மரணமடைந்த ஜனசாக்களைகிளிநொச்சி பூநகரிப் பிரதேசத்திலுள்ள
இரணதீவில் அடக்கம் செய்வதற்கான அரசின் தீர்மானத்தை அங்குள்ள மக்களும் கிருத்துவ மதத் தலைவர்களும், இஸ்லாமிய மதத் தலைவர்களும் கூட எதிர்த்துப் போராடுகின்றனர்.

கொரோனா வைரஸ் தொடர்பான மருத்துவ நிபுணர்குழுவுங் கூட இரணைதீவைக் குறித்துச் சொன்னதாக இல்லை. அக் குழுவின் சிபார்சுகளில் முஸ்லீம்
மக்களின் இறப்பு கொரோனாவில் இடம்பெற்றால் ஜனசாக்களை அந்தந்த இடங்களில் அடக்கம் செய்யலாம் என்றே அறிவித்துள்ளது.

அவ்வாறிருக்க அரசு ஏன் இந்தத் தவறான முடிவை எடுத்தது. இரணைதீவில் ஜனசாக்களை அடக்கம் செய்வதற்கு யாரின் சிபார்சு பெறப்பட்டது?.

எனவே அரசு இரணைதீவில் கொரோனா ஜனசாக்களை அடக்கம் செய்ய எடுத்த இத்தீர்மானத்தை உடன் திருப்பிப் பெற வேண்டும்.

பதிலாக அரசு இஸ்லாமிய மதத்தலைவர்களுடன் கலந்தாலோசித்துப் பொருத்தமான இடங்களில் கொரோனாவினால் மரணமடைந்த ஜனசாக்களை இஸ்லாமிய மத ஆராதனையுடன் நல்லடக்கம் செய்வதற்கு அறிவிக்க வேண்டும் எனக் கோருகின்றோம்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழ் யுவதி கடத்தப்பட்டு வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொலை: மரண தண்டனை விதிக்கப்பட்ட 2 இராணுவத்தினர் விடுதலை!

Pagetamil

மஹிந்த பயணித்த வாகனத்தின் மீது விழுந்த வீதித்தடுப்பு!

Pagetamil

இன்றைய வானிலை

Pagetamil

பிரதான வீதிக்குள்ளும் நீளும் மனிதப் புதைகுழி: நாளை முக்கிய கலந்துரையாடல்!

Pagetamil

வவுனியாவின் குடிப்பரம்பலை சீர்குலைக்கும் முயற்சியில் அரசு ஈடுபடுகிறது!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!