Pagetamil
முக்கியச் செய்திகள்

ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியை பயன்படுத்த சுகாதார அமைச்சு அனுமதி: அடுத்த வாரம் வருகிறது!

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஸ்பூட்னிக்-வி கோவிட் -19 தடுப்பூசியை இலங்கையில் அவசரகால பயன்பாட்டிற்கு தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

மருந்து, உற்பத்தி மற்றும் வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சர் ​​சன்ன ஜெயசுமன இதனை தெரிவித்தார்.

இலங்கையில் அவசரகால பயன்பாட்டிற்கு இந்தியாவின் சீரம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசி முதலாவதாக அங்கீகரிக்கப்பட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக, ஸ்பூட்னிக்-வி தடுப்பூசிக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

ஸ்பூட்னிக்-வி தடுப்பூசியும், ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசியும் ஒத்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தயாராக்கப்பட்டுள்ளன. அவை இரண்டும் செலுத்தும் அளவும் ஒத்தவை.

ஸ்பூட்னிக்-வி தடுப்பூசியை தயாரிக்கும் ரஷ்ய நிறுவனத்திற்கு இலங்கையில் அதன் பயன்பாட்டிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  ஸ்பட்னிக்-வி தடுப்பூசியை உடனடியாகக் கொண்டு வந்து அடுத்த சில வாரங்களுக்குள் பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இருப்பினும், நாட்டில் தடுப்பூசிகளின் முதல் தொகுதி வரும் ஒரு திட்டவட்டமான திகதியை தற்போது கூற முடியாது என இராஜாங்க அமைச்சர் ஜெயசுமன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உலக சுகாதார அமைப்பின் கோவாக்ஸ் திட்டத்தின் கீழ் உலக சுகாதார நிறுவனத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் தடுப்பூசிகளின் முதல் தொகுதி ஞாயிற்றுக்கிழமை நாட்டிற்கு வர உள்ளது என்றும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.

இதையும் படியுங்கள்

ரஷ்யா – உக்ரைன் அமைதி முயற்சியில் உடனடி முன்னேற்றம் இல்லையெனில் ட்ரம்ப் விலகிவிடுவார்!

Pagetamil

கோட்டாவை விட வேகமாக அம்பலமாகும் இனவாத ஜேவிபி அரசு: கஜேந்திரகுமார் சுட்டிக்காட்டல்!

Pagetamil

அரசியல் கட்சிகள் விலகினாலே தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு தீர்வு காணலாமாம்: யாழில் தமிழ் மக்களின் காதில் பூச்சுற்றிய அனுர!

Pagetamil

‘எத்தனை வருடங்களுக்கு என்னை அடைத்து வைத்திருக்கப் போகிறார்கள்?’… கண்ணீர் விட்டு கதறிய பிள்ளையான்: உதய கம்மன்பில தகவல்!

Pagetamil

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை; 4ஆம் மாடியில் உருட்டியெடுக்கப்படும் பிள்ளையான்: கம்மன்பிலவிடம் கண்ணீர் விட்டு கதறல்!

Pagetamil

Leave a Comment