27.9 C
Jaffna
December 10, 2024
Pagetamil
இலங்கை

மாந்தையில் துயரம்: வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் இளம் குடும்பஸ்தர் பலி!

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள சின்ன சன்னார் கிராமத்தில் இன்று வியாழக்கிழமை (04) மதியம் வீடு ஒன்றின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் ஒரு பிள்ளையின் தந்தையான 27 வயதுடையவர் என தெரிய வந்துள்ளது.

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சின்ன சன்னார் கிராமத்தில் இன்று வியாழக்கிழமை (04) மதியம் 1:30 மணியளவில் வீடொன்றில் சுவரை இடித்து வேலை செய்து கொண்டிருந்த போது, வீட்டின் சுவர் முற்றாக இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சகோதரர்கள் இடிபாட்டிற்குள் சிக்கி படுகாயமடைந்துள்ளனர்.

சம்பவத்தில் சிக்குண்டு சுவரின் இடிபாட்டில் இருந்து மீட்கப்பட்ட இருவரும் உடனடியாக பள்ளமடு வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டனர்.

இதன் போது ஒரு பிள்ளையின் தந்தையான 27 வயதுடைய இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். அவரது சகோதரன் மேலதிக சிகிச்சைக்காக மன்னார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை அடம்பன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

காஸ் சிலிண்டர் தேசியப்பட்டியல் எம்.பியாகிறார் பைசர் முஸ்தபா

Pagetamil

38A யின் கீழ் காணி சுவீகரிக்க நடவடிக்கை

east pagetamil

மூங்கிலாறு வீதியை புனரமைக்கக் கோரி அதிகாரிகளிடம் கோரிக்கை

east pagetamil

LIOC நிறுவனத்தின் அதிகாரிகள் கிழக்கு மாகாண ஆளுனருடன் சந்திப்பு

east pagetamil

யாழில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்

Pagetamil

Leave a Comment