குற்றம்

மனைவியின் ஆபாச படங்களை கணவனிற்கே அனுப்பி வெறுப்பூட்டிய கள்ளக்காதலன்: நடுவீதியில் நடந்த நடுங்க வைக்கும் சம்பவம்!

நாரம்மல – பஹமுன பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிளின் மீது காரால் மோதியதுடன், ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த பின்னர், கொலைக்கு பயன்படுத்திய ஆயுதத்துடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நபரை பொலிசார் கைது செய்துள்ளார்.

மாற்றான் மனைவியுடனான காதலால் இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது.

நேற்று (3) புதன்கிழமை மாலை இந்த சம்பவம் நடந்தது.

உயிரிழந்த நபர் சந்தேக நபரின் மனைவியுடன் காதல் தொடர்பை பேணி வந்துள்ளார். இதனால் இருவருக்கும் முரண்பாடு ஏற்பட்டதையடுத்து, மனைவியின் ஆபாச படங்களை கணவனிற்கு அனுப்பி வெறுப்பூட்டியுமுள்ளார்.

இதனால் இருவருக்குமிடையில் தொடர்ந்து தொலைபேசியில் வாக்குவாதம் நடந்து வந்திருக்கிறது. முடிந்தால் நேருக்குநேர் சந்தித்து பார் என இரு தரப்பும் சவால் விட்டதை தொடர்ந்து, நேற்று மாலை 4.30 மணியளவில் இரு தரப்பும் நேரில் சந்தித்துள்ளது.

காதல் தொடர்பிலிருந்தவர் இன்னும் இரண்டு நண்பர்களை அழைத்துக் கொண்டு இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். மற்றையவர் காரில் வந்தார்.

ரம்பேவ- நரம்மல வீதியின் பஹமுன பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்களை, காரில் வந்தவர் மோதித்தள்ளினார். அவர்கள் கீழே விழுந்ததும், காரில் இருந்து இறங்கிய நபர், தனது மனைவியுடன் காதல் தொடர்பிலிருந்தவரை கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்தார்.

அவரது நண்பர்கள் இருவரும் அங்கிருந்த ஓடித்தப்பி விட்டனர்.

இதன்போது நாரம்மல – கிலின்பொல பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார். பஹமுன பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய சந்தேக நபர் பொலிஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார்.

குளியாப்பிட்டி பதில் நீதிவான் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டார்.

சம்பவம் தொடர்பில் நாரம்மல பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
1
+1
1
+1
1
+1
1
+1
4

இதையும் படியுங்கள்

சகோதரி வீட்டுக்கு வந்தவர் வெட்டிக்கொலை

Pagetamil

நகைக்காக 3 உறவினர்களை கொன்ற கொடூரன்!

Pagetamil

தாயாரின் கையடக்க தொலைபேசியில் பேஸ்புக் காதல்: இருவரால் பலாத்காரத்துக்குள்ளான 12 வயது சிறுமி!

Pagetamil

வைத்தியர், மனைவி மீது கத்திக்குத்து

Pagetamil

4 வருடங்களின் முன் காணாமல் போன இளம்தாயின் சடலம் மீட்பு!

Pagetamil

Leave a Comment