Pagetamil
கிழக்கு

மட்டக்களப்பில் ரௌடிகள் வீடு புகுந்து தாக்குதல்!

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமீன்மடு பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது நேற்றிரவு ரௌடிக் குழுவொன்று தாக்குதல் நடாத்தியுள்ளது.

பாலமீன்மடு,புதிய எல்லை வீதியில் உள்ள வீடு ஒன்றிற்கு, இரவு 9.30 அளவில் மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் கொண்ட ரௌடிகள் இந்த தாக்குதலை நடாத்திவிட்டு தப்பிச்சென்றனர்.

வாள் மற்றும் பொல்லுகளுடன் வந்தவர்கள் வீட்டின் கேற்றினை உடைத்துக்கொண்டு ரௌடிகள் உள்ளே வருவதை அவதானித்த வீட்டின் உரிமையாளர்கள் வீட்டுக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டனர். இதையடுத்து, வீட்டின் முன்பாக நின்ற மோட்டார் சைக்கிள்கள் இரண்டினை உடைத்து சேதப்படுத்தியுள்ளதுடன் வீட்டின் ஜன்னல்களை உடைத்து அதன் ஊடாக வாள்களை நீட்டி அச்சுறுதல் விடுத்ததாகவும் வீட்டில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பாலமீன்மடுவில் உள்ள பொலிஸ் காவலரணில் முறையிட்டபோதும் அவர்கள் தங்களால் வரமுடியாது எனவும் மட்டக்களப்பில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறையிடுமாறு கூறியதாகவும் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் நடைபெற்ற நீண்ட நேரத்திற்கு பொலிஸார் அப்பகுதிக்கு வரவில்லையெனவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளர் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

வயலில் நின்றவரை தாக்கிய மின்னல்

Pagetamil

முஷாரப் என்ற நபருக்காக மக்கள் இல்லை; கட்சிக்காவே உள்ளனர்: முன்னாள் உதவித் தவிசாளர் தாஜுதீன்

Pagetamil

சிகை அலங்கரிப்பு நிலைய கதிரையில் உட்கார்ந்த நிலையில் 3 நாட்களாக இருந்த சடலம்!

Pagetamil

சம்மாந்துறையில் மயில் – குதிரை மோதல்: வேட்பாளரும், சகோதரரும் வைத்தியசாலையில்!

Pagetamil

தாயை கொன்ற மகன்

Pagetamil

Leave a Comment