கிழக்கு

மகள் கடத்தப்பட்ட வேதனையில் தாய் தற்கொலை!

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெல்லிக்காடு, தாந்தாமலை பிரதேசத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தாயொருவர் உயிரை மாய்த்துள்ளார்.

ஏரம்பமூர்த்தி நிஷாந்தி (37) என்பவரே நேற்று (03) புதன்கிழமை மாலை இவ்வாறு உயிரை மாய்த்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் உயர்தர பரீட்சை எழுதிவிட்டு வீட்டில் இருந்த தனது மகளை அவரின் விருப்பமின்றி அப்பிரதேச இளைஞன் ஒருவர் திருமணம் செய்துகொள்ளும் நோக்கில் கடத்திச் சென்றிருந்தார்.

இந்த சம்பவத்தினால் மனமுடைந்த நிலையிலேயே குறித்த தாயார் தனது வீட்டில் யாரும் இல்லா நிலையில் உயிரை மாய்த்துள்ளார்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வெட்டிய மரத்தின் அடியை அகற்றுவதில்லையென உத்தரவாதம்

Pagetamil

மட்டக்களப்பில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்!

Pagetamil

பெறுமதியான நீல தூணா மீன் சிக்கியது!

Pagetamil

திருகோணமலையில் சிக்கிய 4 கொள்ளைக்காரிகள்!

Pagetamil

கிழக்கு பல்கலைக்கழகத்தில் நினைவு அஞ்சலி: பொலிசார் அட்டூழியம்!

Pagetamil

Leave a Comment