கிழக்கு

கல்முனையில் இளம் தொழில் முனைவோருக்கு அரச காணி வழங்கல் நேர்முகப்பரீட்சை

ஜனாதிபதியின் இளம் தொழில் முனைவோர்களை ஊக்குவிப்பதற்காக அரசாங்க காணிகளில் முதலீட்டு வாய்ப்புக்களை வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தொழில் முயற்சி ஆற்றல் தொடர்பாக பரீட்சிக்கும் நேர்முகப்பரீட்சை அம்பாறை மாவட்டத்தில் இடம் பெற்று வருகின்றது.

அந்த வகையில், கல்முனை பிரதேச செயலாளர் பிரிவில் தொழில் முயற்சி ஆற்றல் தொடர்பாக பரீட்சிக்கும் நேர்முகப்பரீட்சை செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

பிரதேச செயலாளர் ஜே.லியக்கத் அலி தலைமையில் நடைபெற்ற நேர்முகப்பரீட்சையில் காணி உத்தியோகத்தர்களான ஏ.ஜெமீல், ஏ.எச்.எம்.ஹிபாயத்துல்லாஹ், காணி பயன்பாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.எம்.ஜஹ்பர், பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் யூ.எல்.றமீஸ், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் ஏ.பி.ஏ.ஜெலீல் மற்றும் பட்டதாரி பயிலுனர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

கல்முனை பிரதேச செயலாளர் பிரிவில் 1,431 நபர்களுக்கு தொழில் முயற்சி ஆற்றல் தொடர்பாக பரீட்சிக்கும் நேர்முகப் பரீட்சைக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் ஜே.லியக்கத் அலி தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வெட்டிய மரத்தின் அடியை அகற்றுவதில்லையென உத்தரவாதம்

Pagetamil

மட்டக்களப்பில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்!

Pagetamil

பெறுமதியான நீல தூணா மீன் சிக்கியது!

Pagetamil

திருகோணமலையில் சிக்கிய 4 கொள்ளைக்காரிகள்!

Pagetamil

கிழக்கு பல்கலைக்கழகத்தில் நினைவு அஞ்சலி: பொலிசார் அட்டூழியம்!

Pagetamil

Leave a Comment