27.4 C
Jaffna
October 14, 2024
Pagetamil
முக்கியச் செய்திகள்

உடல்களை அடக்கம் செய்வதற்கு எதிராக 2வது நாளாக இரணைதீவில் போராட்டம்!

கொரோனா தொற்றால் உயிர் இழந்தவர்களின் உடல்களை இரணைதீவு பகுதியில் புதைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றைய தினம் புதன்கிழமை (3) இரணை மாதா நகர் பகுதியில் மக்கள் மற்றும் பங்குத்தந்தையர்கள் இணைந்து போராட்டம் மேற்கொண்ட போதிலும் தொடர்சியாக இரணை தீவு பகுதியில் உடல்களை புதைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வியாழக்கிழமை (4) இரணைதீவு பகுதியில் இரண்டு இடங்களின் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இரணைதீவு பிரதான இறங்கு துறை மற்றும் உடல்களை அடக்கம் செய்வதற்கு குழிகள் தோண்டப்பட்ட இடம் ஆகியவற்றில் மக்கள் இன்றைய தினம் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று இலங்கை மனித உரிமை ஆணைக்குழு மற்றும் மீன்பிடி நீர்வள அபிவிருத்தி அமைச்சர் உட்பட பல தரப்பட்ட தரப்பினருக்கு இரணைதீவு மக்களால் நேரடியாக சென்று எதிர்ப்பு மகஜர் வழங்கி வைக்கப்பட்ட போதிலும் இதுவரை சடலங்களை அடக்கம் செய்வதற்கான மாற்று இடம் தெரிவு செய்யப்படவோ அல்லது இரணைதீவு பகுதியிலே மேற்கொள்ளப்பட்டு வரும் சடலங்களை அடக்கம் செய்யும் பணிகளோ நிறுத்தப்படாத நிலையில் மக்கள் இன்றைய தினம் மேற்படி போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

அதே நேரத்தில் இரணைதீவு பகுதிக்கு செல்லும் மக்களிடன் கடற்படையினர் அச்சுறுத்தும் விதமாக செயற்படுவதாகவும் தீவு பகுதியில் வசிக்கும் மக்கள் தீவுக்கு செல்வதற்கு முன் அடையாள அட்டையை கடற்படையினரிடம் ஒப்படைத்து செல்ல வேண்டும் என பணிக்கப்படுவதாகவும் பொது மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘மோசடி செய்ததால் இயக்கம் அடைத்து வைத்தவரும் தமிழரசு கட்சி வேட்பாளர்; சத்தியலிங்கம், சுமந்திரன் விலகினாலே கட்சி உருப்படும்’: சிவமோகன் அதிரடி!

Pagetamil

வேட்பாளர் தெரிவில் திருப்தியில்லா விட்டாலும் தமிழரசுக்கட்சிக்கு வாக்களிக்க வேண்டுமாம்: சொல்பவர் சிறிதரன்!

Pagetamil

தொடர் மழை… பல பகுதிகளில் நீரில் மூழ்கின!

Pagetamil

ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானத்தை எதிர்ப்பதற்கு அனுர அரசும் தீர்மானம்!

Pagetamil

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மகளிர் வேட்பாளர் தெரிவில் நடந்த தில்லுமுல்லுகள்: அம்பலப்படுத்தும் மகளிரணி

Pagetamil

Leave a Comment