இலங்கையில் COVID-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 83,870 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் நேற்று 318 பேர் COVID-19 தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.
இவர்களில், பேலியகொட COVID-19 கொத்தணியுடன் தொடர்புடையவர்களாக 308 பேரும், சிறைச்சாலை கொத்தணியிலிருந்து 9 பேரும், வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய ஒருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் வைரஸ் தொற்றிலிருந்து 598 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 80,020 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது, 3,367 நபர்கள் COVID-19 தொற்றிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர், தொற்று ஏற்பட்டிருக்கலாமென்ற சந்தேகத்தில் 438 நபர்கள் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1