27.8 C
Jaffna
September 27, 2023
சினிமா

சில்க் சுமிதாவாக ஶ்ரீரெட்டி

நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைத்ததாக புகார் சொல்லி பரபரப்பு ஏற்படுத்திய தெலுங்கு நடிகை ஶ்ரீரெட்டி, மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் சுமிதா வாழ்க்கை கதையில் நடிக்க போவதாக அறிவித்துள்ளார்.

ஏற்கனவே சில்க் சுமிதா வாழ்க்கை ‘த டர்ட்டி பிக்சர்’ என்ற பெயரில் படமாகி வெளியானது. இதில் சில்க் சுமிதா வேடத்தில் வித்யாபாலன் நடித்திருந்தார். மேலும் அவள் அப்படித்தான் என்ற பெயரிலும் சில்க் சுமிதா வாழ்க்கையை படமாக்கி வருகிறார்கள். இந்த நிலையில் ஶ்ரீரெட்டியும் சில்க் சுமிதாவாக நடிக்க இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து ஶ்ரீரெட்டி வெளியிட்டுள்ள வீடியோவில், “நான் சில்க் சுமிதா வாழ்க்கை கதையில் அவரது கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறேன். இந்த படத்தை விளம்பர பட இயக்குனர் மது இயக்குகிறார். படம் எந்த பிரச்சினையும் இல்லாமல் வெளியாக அனைவரின் ஆசீர்வாதமும் வேண்டும்” என்று பேசியுள்ளார். சில்க் சுமிதா 1980 மற்றும் 90-களில் தென்னிந்திய திரையுலகில் முன்னணி கவர்ச்சி நடிகையாக வலம் வந்தார். பின்னர் திடீரென்று தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.

இப்பொழுது அவரது படத்தில் நடித்து வருகிறார் ஶ்ரீரெட்டி

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஒக்டோபரில் தொடங்கும் அஜித், விஜய் படப்பிடிப்புகள்!

Pagetamil

‘படவாய்ப்புக்காக என்னையும் படுக்கைக்கு அழைத்தார்கள்’: நடிகை கிரண்

Pagetamil

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்: அதிகாரபூர்வ அறிவிப்பு

Pagetamil

ரூ.1,000 கோடி வசூலைத் தொட்டது ஷாருக்கானின் ‘ஜவான்’

Pagetamil

நடிகர் விஷாலின் சொத்து, வங்கிக் கணக்கு விவரங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!