அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ட்ரம்பும், அவரது மனைவி மெலானியா ட்ரம்பும் ரகசியமாக கொரோனா தடுப்பு மருந்து போட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ட்ரம்பும், அவரது மனைவி மெலானியா ட்ரம்பும் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறுவதற்கும் முன்னரே ஜனவரி மாதத்திலேயே கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
புளோரிடாவில் சில தினங்களுக்கு முன்பு நடந்த அரசியல் நிகழ்வில் பேசிய ட்ரம்ப், அனைவரும் கொரோனா தடுப்பு மருந்து போட்டுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். அமெரிக்காவில் 2 கோடிக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுளனர். 5 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.
முன்னதாக, அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 3ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இதில் ட்ரம்ப் தோல்வி அடைந்தார். ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றி பெற்றார்.
ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக ட்ரம்ப் குற்றம் சாட்டினார். அத்துடன் பல மாகாணங்களில் வழக்கும் தொடுத்தார். அவை அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.இதற்கிடையில், அமெரிக்காவின் பல பகுதிகளில் ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த ஜனவரி 6ஆம் திகதி அமெரிக்க நாடாளுமன்றத்தை ஜனாதிபதி ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு நடத்திய போராட்டம், கலவரத்தில் 4 பேர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் அமெரிக்காவையே உலுக்கியது குறிப்பிடத்தக்கது.