27.7 C
Jaffna
April 22, 2025
Pagetamil
லைவ் ஸ்டைல்

கழுத்து வலி ரொம்ப அதிகமா இருக்கா? இதை செய்யுங்கள்

கழுத்து வலியால் அவதிப்படுபவர்கள், டால்பின் போஸ் கொண்ட மயூராசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் பெறலாம்.

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, முக்கியமான அனைத்து துறை ஊழியர்களும், தற்போது வீட்டில் இருந்தே,தங்களது அலுவலக பணிகளை மேற்கொள்ள துவங்கி விட்டனர். வீட்டில் இருந்தே பணி செய்வதனால், அவர்களின் வாழ்க்கை ஈஸியாக உள்ளது என்றபோதிலும், இது அவர்களின் உடல் சார்ந்த விடயங்களில் பேராபத்தை விளைவித்துவிட்டது என்றே நாம் சொல்ல வேண்டும்.

கழுத்து வலி, உடல் வலி போன்ற பாதிப்புகளுக்கு, நம்மை இந்த வொர்க் பிரம் ஹோம் கல்சர் இட்டுச் சென்றுள்ளது என்பதே மறக்க முடியாத உண்மை. கழுத்து வலி உள்ளிட்ட பாதிப்புகளால் அவதிப்படுபவர்கள், டால்பின் போஸ் கொண்ட இந்த மயூராசனத்தை தொடர்ந்து செய்துவந்தால், நல்ல பலன்களை பெறலாம் என்பது அந்த பலனை பெற்றவர்களின் கருத்தாக உள்ளது.

​கழுத்து வலி

காலையில் இருந்து இரவு வரை, லேப்டாப்பையே கட்டிக்கொண்டு அழுவது, நம்மை சோர்வுற செய்வது மட்டுமல்லாது, நமது உடல் தசைகளுக்கும் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. இதன்காரணமாக, நமது உடலின் கழுத்து, பின் பகுதியுடன் தொடர்புடைய உடலின் அனைத்து பாகங்களிலும் அதீத வலி ஏற்பட காரணமாக அமைகிறது.

உடலின் பாகங்களின் ஏற்படும் வலியை போக்க, நாம் தற்காலிக நிவாரணியாக சில ஸ்பிரேக்களை பயன்படுத்தி வருகிறோம். இந்த ஸ்பிரேக்களால் நமக்கு நிவாரணம் கிடைக்கிறதோ இல்லையோ, நமது உடலின் தோல் பகுதிக்கு பாதிப்பு ஏற்படுவது என்பது மிகச்சிறந்த உண்மை. இது நமது சுவாச மண்டலத்திலும் பாதிப்பு ஏற்படுத்துவதாக தற்போது தெரிய வந்துள்ளது. இந்த பாதிப்புகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிபுணர்கள், டால்பின் போஸ் கொண்ட மயூராசனத்தை பரிந்துரை செய்கின்றனர்.

இதையும் படியுங்கள்

சமையல் குறிப்புக்கள் – கோவா வடை

Pagetamil

திருகோணமலை ஸ்பெஷல் மாமைற் முறுக்கு

Pagetamil

மட்டக்களப்பு மரக்கறி கூட்டுக்கறி

Pagetamil

வரும் காதலர் தினத்தில் உங்கள் காதலை முன்மொழிய வெற்றிகரமான சூத்திரம் இதுதான்!

Pagetamil

கோழி இறைச்சியை சமைப்பதற்கு முன் கழுவக்கூடாதா?

Pagetamil

Leave a Comment