25.8 C
Jaffna
December 11, 2024
Pagetamil
கிழக்கு

எனக்கு தமிழ் தெரியாது… தமிழ் இளைஞர்களிற்கு சிங்களம் தெரியாது!

ஓர் இனத்துக்கோ அல்லது மதத்துக்கோ இலங்கை சொந்தமானதல்ல; அனைத்து மக்களுக்கும் உரித்தானது. ஆகவே, அனைவரும் இணைந்து நாட்டை கட்டியெழுப்ப வேண்டியதே இன்றை தேவைப்பாடு என அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான டபிள்யு டி வீரசிங்க தெரிவித்தார்.

அம்பாறை, ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோளாவில் 03 அம்பாள் விளையாட்டு மைதானத்தில் 15 இலட்சம் ரூபாய் ஒதுக்கீட்டில் அமையவுள்ள பகல் – இரவு கரப்பந்து விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நடும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

“கிராமத்துக்கு ஒரு மைதானம்” எனும் அரசாங்கத்தின் மைதான அபிவிருத்தித் திட்டத்துக்கு அமைய, நாட்டின் 332 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் மைதானங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன.

இதற்கமைவாக, ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் தலைமையில் மேற்படி நிகழ்வு நடைபெற்றது.

“எனது தாய், தந்தைக்கு தமிழ் தெரியும். அவர்களது தமிழ் நண்பர்களுக்கு சிங்களம் தெரியும். இது 30 வருடங்களுக்கு முன்னர் இருந்த நிலை. ஆனால், எனக்கு தற்போது தமிழ் தெரியாது. அதுபோல் இன்றைய இளம் தமிழ் சமூகத்துக்கு சிங்களம் தெரியாது. இது எமது தவறல்ல. கடந்த கால யுத்தமும் பிரிவினைவாத செயற்பாடுகளுமே காரணம். இதனை நாம் மறந்து, கடந்தகாலம்போல் ஒன்றாக செயற்பட்டு நாட்டைக் கட்டியெழுப்புவோம்” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மலேசிய தூதுவருடன் கிழக்கு மாகாண ஆளுனரின் சந்திப்பு

east pagetamil

பொதுத் தேர்தல் வாக்குகள் மீள எண்ணப்பட வேண்டும்: அதாவுல்லா மனு!

Pagetamil

38A யின் கீழ் காணி சுவீகரிக்க நடவடிக்கை

east pagetamil

மூங்கிலாறு வீதியை புனரமைக்கக் கோரி அதிகாரிகளிடம் கோரிக்கை

east pagetamil

LIOC நிறுவனத்தின் அதிகாரிகள் கிழக்கு மாகாண ஆளுனருடன் சந்திப்பு

east pagetamil

Leave a Comment