இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சசித்ர சேனநாயக்க, எல்.பி.எல் போட்டி ஆட்டநிர்ணய சதி விசாரணையில் முன் பிணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக் போட்டிகளில் இடம்பெற்றதாக கூறப்படும் ஆட்ட நிர்ணய சதி விசாரணைகள் தொடர்பாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சசித்ர சேனநாயக்க தாக்கல் செய்த முன் பிணை மனு, இன்று (2) நீதிமன்றத்தால் விசாரணைக்கு எடுக்கப்பட்ட பின்னர் நிராகரிக்கப்பட்டது.
இன்று பிற்பகல் கொழும்பு மேலதிக நீதிவான் காஞ்சனா நெரஞ்சனி சில்வா முன் பிணை மனு பரிசீலிக்கப்பட்டது.
சசித்ர சேனநாயக்க தாக்கல் செய்த முன் பிணை விண்ணப்பத்தில் உள்ள குறைபாடுகளை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. குறைபாடுகளை சீர் செய்த மனுவை மீள சமர்ப்பிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இலங்கை அணியின் முன்னாள் ஓவ் ஸ்பின்னர், எல்.பி.எல் போட்டிகளின் போது முன்பு ஒரு வீரரை அணுகி ஆட்டநிர்ணய சதியில் ஈடுபட கேட்டுக்கொண்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டையும் மறுத்துள்ளார்.