தொழில்நுட்பம்

வாட்ஸ்அப் இஸ்லாம் மீதான வெறுப்பைப் பரப்புகிறதா?

வாட்ஸ்அப் குழுக்களில் பயத்தை, வெறுப்பைப் பரப்பும் வகையில் அனுப்பப்படும் ‘Fear speech’ குறுஞ்செய்திகள் குறித்த ஆய்வு ஒன்றை கரக்பூர் ஐ.ஐ.டி மற்றும் அமெரிக்காவின் எம்.ஐ.டி (MIT – Massachusetts institute of technology) இணைந்து நடத்தியுள்ளது. 5000 குழுக்களில் இருந்து 20 லட்சம் குறுஞ்செய்திகளை ஆய்வு செய்து இதன் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டிருக்கின்றன.

ஆகஸ்ட் 2018-ல் இருந்து ஆகஸ்ட் 2019-வரை வாட்ஸ்அப் குழுக்களில் இருந்து சேகரிக்கப்பட்ட குறுஞ்செய்திகளை Fear Speech, Normal என இருவகைகளாகப் பிரித்துள்ளனர். இதில் வாட்ஸ்அப் குழுக்களில் அனுப்பப்படும் மூன்றில் ஒரு குறுஞ்செய்தி இஸ்லாம் மீதான பயத்தையும், வெறுப்பையும் விதைக்கும் விதமாக இருப்பதாக அதிர்ச்சிகரமான முடிவுகள் கிடைத்திருக்கிறது. மேலும், இந்த மாதிரியான Fear Speech வகை குறுஞ்செய்திகள், சாதாரண குறுஞ்செய்திகளை விட அதிகம் ‘Forward’ செய்யப்படுவதாகவும் தெரியவந்திருக்கிறது. முக்கியமாக இஸ்லாம் மற்றும் இஸ்லாம் மக்கள் மீதான வெறுப்பை, பயத்தை விதைப்பது போலவே பெரும்பாலான Fear Speech குறுஞ்செய்திகள் இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இந்தக் குழுக்களில் இருக்கும் 10 சதவிகித பயனர்கள் மட்டுமே இதுபோன்ற இஸ்லாமோ போபியா குறுஞ்செய்திகளை அனுப்புவதாகவும் ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. இவர்களின் முக்கிய நோக்கமே இஸ்லாம் மக்கள் மீதான வெறுப்பையும், பயத்தையும் அதிகரிப்பது மட்டுமே. மற்ற தளங்களை விட வாட்ஸ்அப்பே இதுபோன்ற பரப்புரைகளுக்கான முக்கியத் தளமாக இருக்கிறது என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக், ட்விட்டர் போன்ற தளங்களில் பகிரப்படும் தகவல்கள் ‘Content Moderation’ மூலம் வடிகட்டப்பட்டு விடும். ஆனால், வாட்ஸ்அப்பில் அது போன்ற செயல்முறைகள் எதுவும் கிடையாது என்பதால், ஒருவர் பகிரும் தகவல் எந்த மாற்றமும் தடையும் இன்றி சென்றடைகிறது. எனவேதான் இது போன்ற பரப்புரைகளுக்கு வாட்ஸ்அப் முக்கியத் தளமாக இருப்பதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

Gemini AI மொடல் அறிமுகம்: AI ரேஸில் முந்தும் கூகுள்?

Pagetamil

ருவிட்டரின் லோகோவை ‘X’ என மாற்றிய எலான் மஸ்க்!

Pagetamil

ருவிட்டருக்கு மாற்றாக மெட்டாவின் த்ரெட்ஸ் அறிமுகம்!

Pagetamil

இனி பாஸ்வேர்ட் தேவையில்லை: கூகிளின் புதிய தொழில்நுட்பம்!

Pagetamil

ருவிற்றரின் லோகோவை மாற்றினார் எலான் மஸ்க்: நீல குருவிக்கு பதிலாக நாய் படம்

Pagetamil

Leave a Comment