இலங்கை

யாழ் போதனா இரத்த வங்கியில் அனைத்து குருதி இனங்களுக்கும் தட்டுப்பாடு: உயிர் காக்கும் பணிக்கு முன்வாருங்கள்!

யாழ் போதனா இரத்த வங்கியில் அனைத்து குருதி இனங்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகின்ற நிலையில் குருதி கொடையாளர்கள் உயிர் காக்கும் பணிக்கு முன்வர வேண்டும் என வடபிராந்திய குருதி மாற்று பிரயோக வைத்திய நிபுணர் மதுராங்கி கிருஸ்ணபிள்ளை அழைப்பு விடுத்துள்ளார்.

நேற்று திங்கட்கிழமை யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கிப் பிரிவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மருத்துவ நிபுணர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எல்லா வகையான இரத்த வகைகளுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. கொவிட் தொற்று காரணமாக நடமாடும் இரத்ததான முகாம்களை நடத்த முடியாமல் போனதால் நாடளாவிய ரீதியில் இரத்தம் சேகரிப்பில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டது.

இதன் காரணமாக கர்ப்பிணிப் பெண்கள், விபத்துக்களில் பாதிக்கப்படுவோர் மற்றும் புற்றுநோயாளர்களுக்கு வழங்குவதற்கு அதிக இரத்தம் தேவைப்படுகிறது.

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 50 கிலோ உடல் நிறை உடையவர்கள் இரத்த வங்கியில் இரத்தம் வழங்க முடியும். (NBTS )தேசிய குருதி மாற்று பிரிவு என்னும் இணையத்தளம் ஊடாக முற்பதிவுகளை செய்து குருதியை வழங்க முடியும்.

குருதி வழங்குவதால் உடலுக்கு விதமான பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்பில்லை நான்கு மாதத்துக்கு ஒரு தடவை ஒருவர் குருதி வழங்க முடிவதோடு கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் 14 நாட்களுக்கு பின்னர் குருதி வழங்க முடியும்.

சுய தனிமைப்படுத்தலில் வீடுகளில் இருந்தவர்கள் 21 நாட்களுக்குப் பின்னரும் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தோர் 3மாத காலத்திற்குப் பின்னரும் குருதி வழங்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தரமற்ற ஊசி மருந்தினால் மற்றொரு நோயாளி பலி

Pagetamil

கிராம உத்தியோகத்தர்களின் சம்பளம், கொடுப்பனவுகள் அதிகரிப்பு

Pagetamil

2024 தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு விண்ணப்பம் கோரல்

Pagetamil

நாகபூசணி அம்மன் திருவிழா முன்னாயத்த கூட்டம்

Pagetamil

வளிமண்டலவியல் திணைக்களத்தின் சிவப்பு எச்சரிக்கை

Pagetamil

Leave a Comment