மேலும் 7 கொரோனா மரணங்கள்!

Date:

இலங்கையில் இன்று கொரோனா தொற்றினால் மேலும் 7 கொரோனா மரணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்மூலம் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 483 ஆக உயர்ந்துள்ளது.

இன்று அறிவிக்கப்பட்ட கொரோனா மரணங்களின் விபரம்-

கொழும்பு 15 (மோதறை/ மட்டக்குளி) பிரதேசத்தைச் சேர்ந்த, 87 வயதான பெண் ஒருவர், தனது வீட்டில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (01) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா, உக்கிர நீரிழிவு, உக்கிர சிறுநீரக தொற்று மற்றும் உயர் இரத்த அழுத்தம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 05 நாரஹேன்பிட்டி) பிரதேசத்தைச் சேர்ந்த, 89 வயதான பெண் ஒருவர், தனது வீட்டில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (01) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா மற்றும் உக்கிர நீரிழிவு என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 15 (மோதறை/ மட்டக்குளி) பிரதேசத்தைச் சேர்ந்த, 78 வயதான பெண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் இன்று (02) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா, உக்கிர நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த, 73 வயதான ஆண் ஒருவர், பிம்புர ஆதார வைத்தியசாலையில் கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு, மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (01) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா மற்றும் சுவாசத் தொகுதி செயலிழப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிலிமத்தலாவை பிரதேசத்தைச் சேர்ந்த, 63 வயதான பெண் ஒருவர், பேராதெனிய போதனா வைத்தியசாலையில் கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, தெல்தெனிய ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு, மரணமடைந்துள்ளார். அவரது மரணம் இன்று (02) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், உக்கிர கொவிட்-19 நிமோனியா, உயர் இரத்த அழுத்தம் மற்றும் உக்கிர நீரிழிவு என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 02 (கொம்பனித்தெரு/ யூனியன் பிளேஸ்) பிரதேசத்தைச் சேர்ந்த, 63 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு, மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (01) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம் கொவிட்-19 நிமோனியா என அறிவிக்கப்பட்டுள்ளது.

கலேவல பிரதேசத்தைச் சேர்ந்த, 63 வயதான ஆண் ஒருவர், மாத்தளை மாவட்ட பொது வைத்தியசாலையில் கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, தெல்தெனிய ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு, மரணமடைந்துள்ளார். அவரது மரணம் இன்று (02) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா மற்றும் நுரையீரல் புற்றுநோய் நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

‘இம்ரான் கானுக்கு பார்வை இழப்பு’ – மருத்துவக் குழு பரிசோதிக்க பாக். உச்ச நீதிமன்றம் உத்தரவு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்மான் கானுக்கு வலது கண்ணில் பார்வை இழப்பு...

CTC மீதான விமர்சனங்கள்- சிறு பதில்

“CTC புலிகளின் முன்னணி அமைப்பு” CTC என்பது கனடாவில் பதிவு செய்யப்பட்ட, கனடிய...

சமூக ஊடகங்களில் பரவும் அதிர்ச்சிக் காணொளி: 7 இளைஞர்கள் கைது!

சமூக ஊடகங்களில் ஒருவர் தாக்கப்படுவதைக் காட்டும் தாக்குதல் தொடர்பாக ஏழு சந்தேக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்