Pagetamil
உலகம்

ஜெர்மனியில் ஊரடங்கு மேலும் நீடிக்கப்படலாம்!

ஜெர்மனியில் ஊரடங்கை மேலும் நீட்டிக்க அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஜெர்மனியில் கொரோனா பரவலை முழுமையாகக் கட்டுப்படுத்தும் நோக்கில் மார்ச் 28ஆம் திகதிவரை ஊரடங்கை நீட்டிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான மாகாண ஆளுநர்களுடன் ஜனாதிபதி ஏஞ்சலா மெர்கல் ஆலோசனை நடத்தி வருகிறார்.

கடந்த 24 மணி நேரத்தில் ஜெர்மனியில் 5,207 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 237 பேர் பலியாகி உள்ளனர்.

ஜெர்மனியில் 24 இட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 69,125 பேர் பலியாகி உள்ளனர்.

சீனாவைத் தொடர்ந்து, பிரிட்டனில் பரவத் தொடங்கிய உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ், ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் பரவி வருகிறது.

இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் கொரோனா மருத்துவப் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. சமூக விலகலை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு சார்பாகத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ஸ்புட்னிக், ஜோன்சன் & ஜோன்சன், மொடர்னா, பைசர் ஆகிய தடுப்பு மருந்துகள் புதிய வகை கொரோனா வைரஸுக்கு எதிராகப் பயன் அளிப்பதாக மருந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இதையும் படியுங்கள்

அணுசக்தி பொருட்களைப் பயன்படுத்தாமல் பேரழிவு தரும் ஹைட்ரஜன் குண்டை உருவாக்கும் சீனா

Pagetamil

வத்திக்கான் தேவாலய புகை போக்கியில் வெண் புகை, கரும்புகை வந்தால் என்ன அர்த்தம்?: புதிய போப் தெரிவு செய்யப்படும் பாரம்பரிய முறை!

Pagetamil

போப் பிரான்ஸிஸ் காலமானார்!

Pagetamil

ஈஸ்டர் வார இறுதி போர் நிறுத்தத்தை அறிவித்தார் புடின்

Pagetamil

மனிதர்கள், ரோபோக்கள் பங்கேற்ற மரதன் பந்தயம்: சீனாவில் நடந்த ஆச்சரியம்!

Pagetamil

Leave a Comment