குற்றம் முக்கியச் செய்திகள்

சூட்கேஸில் சடலம்: 26 வயது யுவதியே கொல்லப்பட்டார்; பயணிகள் பேருந்தில் சடலம் கொண்டு வரப்பட்டது! (PHOTOS)

கொழும்பு, டாம் வீதியில் சூட்கேஸிற்குள் வைக்கப்பட்டிருந்த சடலத்திற்குரியவர், 26 வயதான யுவதியென பொலிசார் சந்தேகிக்கின்றனர். ஹன்வெல்ல பகுதியில் அவர் கொல்லப்பட்டு, சடலம் சூட்கேஸிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

டாம் வீதியில் கருப்பு நிற சூட்கேஸ் ஒன்று நீண்டநேரமாக காணப்பட்டதையடுத்து, நேற்று (1) பிற்பகல் 2.30 மணியளவில் டாம் வீதி பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்று பரிசோதித்த பொலிசார், சூட்கேஸிற்குள், கருப்பு நிற பொலித்தீனில் சுற்றப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் இருப்பதை அவதானித்தனர்.

சூட்கேஸிற்குள் சடலத்தின் தலை துண்டிக்கப்பட்டிருந்தது.

அந்த பகுதியிலுள்ள சிசிரிவி கமரா காட்சிகளின் அடிப்படையில் பொலிசார் நடத்திய விசாரணையில், சடலத்தை கொண்டு வந்து வைத்தவர்களையும், சூட்கேஸ் கொண்டுவரப்பட்ட பயணிகள் பேருந்தையும் அடையாளம் கண்டனர்.

இதன்படி, பேருந்து சாரதி, நடத்துனர் அடையாளம் காணப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

யுவதியை ஹன்வெல்ல பகுதியில் கொலை செய்து, சூட்கேஸிற்குள் அடைத்து, பேருந்திற்குள் கொண்டு வந்து, வீதியோரம் இறக்கி வைத்தவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்த 3 பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

What’s your Reaction?
+1
0
+1
2
+1
0
+1
0
+1
1
+1
5
+1
2

இதையும் படியுங்கள்

தையிட்டி விகாரையில் வழிபட தமிழ் பொலிசார் கட்டாயப்படுத்தப்படுகிறார்களா?

Pagetamil

சீனி வரியிழப்பை உறுதி செய்த இராஜாங்க அமைச்சர்!

Pagetamil

ஜனாதிபதி தேர்தலில் சரத் பென்சேகாவும் களமிறங்குகிறார்!

Pagetamil

சகோதரி வீட்டுக்கு வந்தவர் வெட்டிக்கொலை

Pagetamil

LPL 2024: ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்களின் விபரம்!

Pagetamil

Leave a Comment