சிஐடியின் முன்னாள் பணிப்பாளர் சனி அபயசேகர மற்றும் சப் இன்ஸ்பெக்டர் சுகத் மெண்டிஸ் ஆகியோர் தம்மை பிணையில் விடுவிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த திருத்த விண்ணப்பங்களை மார்ச் 17 அன்று விசாரணைக்கு எடுக்க உயர்நீதிமன்றம் தீர்மானித்தது.
நேற்று (1) இந்த முடிவு அறிவிக்கப்பட்டது.
புதிய ஜனாதிபதி பதவியேற்றதும் முதல் நடவடிக்கைகளில் ஒன்றாக, சனி அபேசேகர சிஐடி பணிப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். பின்னர், தொழிலதிபர் முகமது ஷியாம் கொலை வழக்கில் சாட்சியங்களை இட்டுக்கட்டியதாக கூறி சனி அபய்சேகர மற்றும் சுகத் மெண்டிஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். அவர்களின் கைது அரசியல் பழிவாங்கல் என ஐ.நா மனித உரிமைகள் பேரவை சுட்டிக்காட்டியது.