நாட்டில் நேற்று 310, COVID-19 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 83,552 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 291 பேர் மினுவாங்கொட- பேலியகொட COVID-19 கொத்தணியுடன் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டனர். நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து 12 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
அதன்படி, மினுவாங்கொட- பேலியகொட COVID-19 கொத்தணியுடன் தொடர்புடைய தொற்றாளர்களின் எண்ணிக்கை 79,392 ஆக அதிகரித்துள்ளது.
வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய 7 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
தற்போது நாடு முழுவதும் 64 வைத்தியசாலைகளில் 3,654 பேர் கொரோனா வைரஸுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று, COVID-19 இலிருந்து மீண்ட 475 நபர்கள் மருத்துவமனைகளில் இருந்து வெளியேற்றினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கையை 79,422 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் தொற்று சந்தேகத்தில் 451 பேர் மருத்துவ கவனிப்பில் உள்ளனர்.