தனது பச்சிளங்குழந்தையை கொடூரமாக தாக்கிய தாயார் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
யாழ்ப்பாணம், மணியந்தோட்ட பகுதியை சேர்ந்த 23 வயதான தாயொருவரே கைது செய்யப்பட்டார்.
நேற்று (1) இரவு தனது குழந்தையை கொடூரமாக தாக்கிய இளம் தாயொருவரின் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இன்று காலையில் இது தொடர்பில் நடவடிக்கையெடுத்த சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகள், குழந்தையை தமது பொறுப்பில் எடுத்தனர். அத்துடன் தாயாரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் திருகோணமலையை சேர்ந்தவர் என்றும், தற்போது அரியாலையில் வாடகைக்கு குடியிருக்கிறார் என்பதும் தெரிய வந்தது. அத்துடன், குவைத்தில் குழந்தை பிரசவித்து நாடு திரும்பியதாகவும், கணவர் பணம் அனுப்பாததால், அவருக்கு அனுப்ப குழந்தையை அடிக்கும் வீடியோவை பதிவு செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.