Pagetamil
இலங்கை

அமெரிக்கா, பிரிட்டன் போல மாற ஆசைப்படும் பீரிஸ்!

அமெரிக்கா, பிரிட்டனில் முப்படையினரை பாதுகாக்க பலமான சட்ட ஏற்பாடுகள் உள்ளன. 30 வருட யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த எமது படையினரைத்தான் வெளிநாடுகள் வேட்டையாட முயல்கின்றன என குமுறியிருக்கிறார் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்காவின் சார்பில் உரையாற்றிய தூதர் ஜோன் போஸ்டன்,

சர்வதேச குற்ற நீதிமன்றத்தின் எந்த ஒரு அதிகாரியும் அமெரிக்காவின் முப்படையினரை விமர்சிக்க முன்வருவர்களாக இருந்தால் அவர்கள் சிறைக்குள் தள்ளப் படுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டனிலும் அதே நடைமுறையே உள்ளது. அது தொடர்பில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பலமான வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க முப்படையினரையும் பாதுகாக்க அந்தந்த நாடுகளில் பலமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

எமது நாட்டைப் பொறுத்தவரையில் 30 வருட யுத்தத்தை நிறைவு செய்து நாட்டு மக்களுக்கு சுதந்திரத்தை பெற்றுக் கொடுத்த முப்படையினரை வேட்டையாட நினைப்பது பெரும் அநீதியான நடவடிக்கையாகும்.

இலங்கை தொடர்பில் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் மேற்கொண்டுள்ள செயற்பாடுகளை முழுமையாக நிராகரிப்பதுடன், அரசாங்கம் என்ற வகையில் அதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஐக்கிய நாடுகள் அமைப்பில் தொடர்ந்து ஏழு தசாப்தங்களாக இலங்கையில் அங்கம் வகித்து வருகிறது. தொடர்ந்து நாம் அதன் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு இணங்க செயல்பட்டு வருகிறோம். தொடர்ந்தும் அங்கத்துவ நாடுகளுடன் சுமுகமான நட்புறவைப் பேணி செயல்படுவோம். எனினும் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம்.

மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கையை ஆரம்பத்திலிருந்தே ஒருதலைப்பட்சமானது என நிராகரித்து வருகிறோம்.

எத்தகைய ஆய்வுகளும் இல்லாமல் தன்னிச்சையான அடிப்படையற்ற விடயங்களே அதில் முன்வைக்கப்பட்டுள்ளன. மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் கூட அதனை ஏற்றுக்கொண்டு குறித்த அறிக்கையில் திருத்தங்கள் செய்வது பொருத்தமானது என குறிப்பிட்டுள்ளது.

இது எமக்கு நீதியை பெற்றுத்தரும் அறிக்கையல்ல. மாறாக அந்த அறிக்கையின் அடிப்படையே தவறானது.

2019 நவம்பர் மாதத்தில் மனித உரிமை ஆணையாளர் வெளியிடப்பட்ட அறிக்கை எமது நாட்டின் உள்விவகாரங்களில் நேரடியாக தலையிடுவதாக அமைந்துள்ளது. வெளிநாடுகளில் நலன்கள் அந்த நாட்டு அரசாங்கங்களின் அரசியல் இருப்பு என்பவற்றை சார்ந்துள்ளது. அவை எந்தவகையிலும் இலங்கையின் நலன் சார்ந்த விடயங்களுடன் சம்பந்தப்பட்டதல்ல. எமது நாட்டை அரசியல் கால்பந்தாக உபயோகித்தே மேற்படி வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றார்.

இதையும் படியுங்கள்

பிள்ளையானிடம் நடத்தப்படும் விசாரணையில் பல தகவல்கள் வெளிப்படுகிறது!

Pagetamil

மாத்தறை சிறைச்சாலையில் களேபரம்: கண்ணீர்ப்புகை வீச்சு!

Pagetamil

துப்பாக்கிச்சூட்டில் டான் பிரியசாத் உயிரிழக்கவில்லை!

Pagetamil

துப்பாக்கி இயங்காததால் தப்பித்த வர்த்தகர்: துப்பாக்கிதாரி மடக்கிப் பிடிப்பு!

Pagetamil

முழு உலகத்துக்குமான ஆன்மீக தலைவராக பணியாற்றியவர் பாப்பரசர்

Pagetamil

Leave a Comment