முள்ளியவளை – முறிப்பு பகுதியில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (28) மாலை, தோட்ட வேலைகளில் ஈடுபட்டிருந்த ஒருவரே குளவிக்கொட்டிற்கு இலக்கானார். அவர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், உயிரிழந்தார்.
முள்ளியவளையை சேர்ந்த கந்தசாமி சத்தியநாதன் (51) என்பவரே உயிரிழந்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1