27.2 C
Jaffna
February 7, 2025
Pagetamil
சினிமா

100 kg எடையை குறைத்த கீர்த்தி சுரேஸ் அக்கா ரேவதி சுரேஸ்

நடிகை கீர்த்தி சுரேஷின் அக்கா ரேவதி சுரேஷ், பிரபல மலையாள இயக்குநர் ப்ரியதர்ஷனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றுகிறார். சினிமா துறையில் தனக்கான அடையாளத்தை உருவாக்கிக்கொண்டிருப்பவர், உடல் பருமனால் பல்வேறு கேலி, கிண்டல்களுக்கு ஆளாகியிருக்கிறார். இதனால், தாழ்வு மனப்பான்மையுடன் இருந்துள்ளவருக்கு, அவரின் குடும்பம் உற்ற துணையாக இருந்திருக்கிறது. இதனால், சினிமா பணிகளுக்கு இடையே, உடல் எடையையும் கணிசமாகக் குறைத்திருக்கிறார்.

உடல் எடையைக் குறைப்பதற்கு முந்தைய, பிந்தைய படங்களைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ரேவதி.

ஒருத்தர் இருப்படித்தான் இருக்கணும்; இப்படி இல்லைனா தப்புன்னு யாரும் யாருக்கும் ப்ரீ அட்வைஸ் பண்ணாதீங்க. புறத்தோற்றம்தான் முக்கியமானதுங்கிற மாதிரியே ஒரு போலியான கட்டமைப்பை இன்னும் எத்தனை நாளைக்குத்தான் கட்டமைச்சு வெக்கப் போறீங்க? வயசுக்கும் அனுபவத்துக்கும் ஏத்த மாதிரி நம்ம ஒவ்வொருத்தர் பேச்சும், குணங்களும், செயல்களும் இருக்கணும். ஒருத்தரை சந்தோஷப்படுத்துறதை விடவும், இன்னொருத்தரை எந்த வகையிலும் காயப்படுத்தாம இருக்கக் கத்துக்கோங்க. வார்த்தைகளா நீ தூக்கி எறியிற குப்பை, ஒருநாள் உங்க மேல எறியப்படும்போதுதான் அந்த வலி உங்களுக்குப் புரியும். அதுக்கு இடம் கொடுக்காதீங்க” என்று வேண்டுகோள் விடுத்து முடித்தார் ரேவதி சுரேஷ்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கல்லூரி கதையில் சிலம்பரசன்!

Pagetamil

‘பார்க்கிங்’ இயக்குநருடன் இணையும் சிலம்பரசன்

Pagetamil

இயக்குநர் அருண்குமார் திருமணம்: திரைப் பிரபலங்கள் நேரில் வாழ்த்து

Pagetamil

ஜூனியர் என்.டி.ஆருக்கு நாயகியாக ருக்மணி வசந்த் ஒப்பந்தம்!

Pagetamil

கணவரை பிரிந்தார் அபர்ணா வினோத்!

Pagetamil

Leave a Comment