இலங்கை

மேலும் 7 கொரோனா மரணங்கள்!

கொரோனா தொற்றினால் உயிரிழந்த மேலும் 7 மரணங்கள் நேற்று (28) அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, இலங்கையில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 471ஆக உயர்ந்துள்ளது.

நேற்று அறிவிக்கப்பட்ட மரணங்களின் விபரங்கள்-

குருணாகல் பிரதேசத்தைச் சேர்ந்த, 56 வயதான ஆண் ஒருவர், குருணாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த 26ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்றுடன் உக்கிர நீரிழிவு மற்றும் உக்கிர குடற்புண் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பன்னிபிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த, 87 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, கண்டி தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு, மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று முன்தினம் (27) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா, குருதி விஷமடைவு, உக்கிர சிறுநீரக சேதமடைவு மற்றும் இருதய நோய் நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த, 55 வயதான ஆண் ஒருவர், அவரது வீட்டில் வைத்து மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த 26ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்றினால் ஏற்பட்ட சுவாசத் தொகுதியில் உக்கிரமான சிக்கல் நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்த, 59 வயதான ஆண் ஒருவர், தொம்பே மாவட்ட வைத்தியசாலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, ஐடிஎச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு, மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (28) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், குருதி விஷமடைவு, கொவிட்-19 நிமோனியா மற்றும் ஈரல் தொற்று என அறிவிக்கப்பட்டுள்ளது.

ருக்கஹவில பிரதேசத்தைச் சேர்ந்த, 79 வயதான பெண் ஒருவர், வத்துபிட்டிவல ஆதார வைத்தியசாலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு, மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று முன்தினம் (27) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா மற்றும் குருதி விஷமடைவு அதிர்ச்சி, என அறிவிக்கப்பட்டுள்ளது.


தெமலகம பிரதேசத்தைச் சேர்ந்த, 51 வயதான ஆண் ஒருவர், கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு, மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (28) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா மற்றும் புற்றுநோய் நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 05 (நாரஹேன்பிட்டி) பிரதேசத்தைச் சேர்ந்த, 81 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு, மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்றுறு (28) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தரமற்ற ஊசி மருந்தினால் மற்றொரு நோயாளி பலி

Pagetamil

கிராம உத்தியோகத்தர்களின் சம்பளம், கொடுப்பனவுகள் அதிகரிப்பு

Pagetamil

2024 தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு விண்ணப்பம் கோரல்

Pagetamil

நாகபூசணி அம்மன் திருவிழா முன்னாயத்த கூட்டம்

Pagetamil

வளிமண்டலவியல் திணைக்களத்தின் சிவப்பு எச்சரிக்கை

Pagetamil

Leave a Comment