28.6 C
Jaffna
September 21, 2023
இலங்கை

மேலும் 5 கொரோனா மரணங்கள்!

இலங்கையில் மேலும் 5 கொரோனா மரணங்கள் இன்று (28) பதிவாகியுள்ளன. இதன்மூலம், கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 476 ஆக உயர்ந்துள்ளது.

இன்று அறிவிக்கப்பட்ட மரணங்களின் விபரம்-

கணேமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த, 73 வயதான பெண் ஒருவர், கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, பிம்புர ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் இன்று (01) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா மற்றும் பித்தப்பை புற்றுநோய் நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 10 (மருதனை) பிரதேசத்தைச் சேர்ந்த, 75 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, பிம்புர ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு, மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த பெப்ரவரி 26ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா மற்றும் உக்கிர நீரிழிவு என அறிவிக்கப்பட்டுள்ளது.

புளத்கொஹுபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த, 83 வயதான ஆண் ஒருவர், கரவனெல்ல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த பெப்பரவரி 11ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா என அறிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த, 61 வயதான ஆண் ஒருவர், பேராதெனிய போதனா வைத்தியசாலையில் கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, கண்டி தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு, மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (28) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா என அறிவிக்கப்பட்டுள்ளது.

பூஜாபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த, 75 வயதான பெண் ஒருவர், கண்டி தேசிய வைத்தியசாலையில் கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, தெல்தெனிய ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு, மரணமடைந்துள்ளார். அவரது மரணம் இன்று (01) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா மற்றும் இருதய செயலிழப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நிஷாந்த முத்துஹெட்டிகமவின் விளக்கமறியல் நீடிப்பு!

Pagetamil

‘அந்தப் பெண் கடந்தகாலத்தை பற்றி சொன்னதால் பீதியானேன்’: தனுஷ்க குணதிலக!

Pagetamil

யாழ் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் போராட்டம்

Pagetamil

இன்று இலங்கையர்கள் தூங்கும் போது ஜனாதிபதி செய்யப்போகும் காரியம்!

Pagetamil

ஈஸ்டர் தாக்குதல் உண்மையை கண்டறிய சர்வதேச விசாரணை தேவை

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!