2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர சாதாரணதரப் பரீட்சை இன்று திங்கட்கிழமை (1) காலை கொவிட்-19 சுகாதார நடை முறைகளை பேணி ஆரம்பமாகியுள்ளது.
அதற்கு அமைவாக மன்னார் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளிலும் கல்விப் பொது தராதர சாதாரணதரப் பரீட்சை சுகாதார நடை முறைகளுக்கு அமைவாக ஆரம்பமாகி உள்ளது.
பாடசாலை பரீட்சார்த்திகள் மற்றும் தனியார் பரீட்சார்த்திகள் நேரத்துடன் பரீட்சை மண்டபங்களுக்கு சென்றுள்ளதை அவதானிக்கக் கூடியாதாக உள்ளது.
மன்னார் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 245 பாடசாலைப் பரீட்சார்த்திகளும், 2 ஆயிரத்து 647 தனிப்பட்ட பரீட்சார்த்திகளுமாக மொத்தமாக 4 ஆயிரத்து 892 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1