28.5 C
Jaffna
October 5, 2024
Pagetamil
இலங்கை

பெண்ணை திருமணம் செய்த இலங்கைப் பெண்!

பெண்ணொருவரை திருமணம் செய்த இலங்கைப் பெண்ணின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இந்த ஜோடியின் திருமணம் 2019ஆம் ஆண்டின் இறுதியில் நடந்திருந்தாலும், தற்போது இலங்கையில் அதிகம் பார்க்கப்படும் வீடியோவாக மாறியுள்ளது.

சித்தாரா சந்தமாலி பெர்னாண்டோ- ஜெனிபர் எலிசபெத் கார்ட்டர் என்ற இரண்டு பெண்களே திருணம் செய்து ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள்.

1980களில் சித்தாரா குடும்பம் கனடாவில் குடியேறியது. ஒக்டோபர் 2019 இல் மேற்கத்திய பாரம்பரிய முறை, கண்டிய திருமண முறை கலப்பில் இருவரும் திருமணம் செய்து ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள்.

 

ஒன்றரை வருடங்களின் பின்னர் அவர்களின் திருமண வீடியோ வைரலாகி, ஏராளமானவர்கள் அதை பார்த்த பின்னர், இந்த ஜோடி பற்றிய தகவல்கள் இலங்கையில்  வைரலாகி வருகிறது.

திருமண வீடியோ அந்த ஆண்டு நவம்பரில் யூடியூப்பில் வெளியிடப்பட்டது, இப்போது அது 600,000 க்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டுள்ளது.

கடந்த வார இறுதியில் சிங்கள மொழி பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட பின்னர் இந்த வீடியோ சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகி, கிட்டத்தட்ட 7,000 முறைக்கு அதிகமாக பகிரப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை காலை தனது தாயின் அழைப்பால் அது தனது கவனத்திற்கு வந்தது என்று சித்தாரா கூறினார். அவரது பெற்றோர் இலங்கையில் உள்ளவர்களிடமிருந்து தொலைபேசி அழைப்புகளைப் பெற்று, திருமணத்தைப் பற்றி கருத்து தெரிவித்ததோடு, அவர்களுக்கு வாழ்த்துக்களும் தெரிவித்தனர்.

இந்த வீடியோ இலங்கையில் வைரலானதை தொடர்ந்து, ஒரு பாலின உறவு பற்றிய விவாதங்கள் தீவிரமடைந்துள்ளது. இது குறித்த கருத்துக்களில் அதிகமானவர்கள் எதிர்மறையான கருத்தை சொன்னாலும், விவாதத்தை தூண்டியதில் ஊக்கமடைவதாக சித்தாரா தெரிவித்துள்ளார்.

திருமணத்தின் போது சித்தாரா புடவையில் கண்டியன் மணமகனாகவும், ஜெனிபர் கவுனில் மேற்கு மணமகளாகவும் தோற்றமளித்ததாக தெரிவித்தார். கனடாவின் ஆல்பர்ட்டாவின் எட்மண்டனில் திருமணம் நடைபெற்றது.

சித்தாராவின் சகோதரி சட்டத்தரணி, திருமண பதிவாளர் என்பதால் சிரமமின்றி இருவருக்குமான திருமணம் நடபெற்றது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
2

இதையும் படியுங்கள்

டயானா வழக்குக்கு திகதி நிர்ணயம்

Pagetamil

மக்களால் நிராகரிக்கப்பட்ட தரப்புக்கள் புது வடிவம் பெற முயற்சி

Pagetamil

சஜித், ரணிலை சந்தித்த இந்திய வெளிவிவகார அமைச்சர்!

Pagetamil

பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து துப்பாக்கிகளையும் மீள ஒப்படைக்க அரசு உத்தரவு!

Pagetamil

ஜனாதிபதியை சந்தித்த இந்திய வெளிவிவகார அமைச்சர்

Pagetamil

Leave a Comment