பொத்துவிலில் இருந்து பொலிகண்டிக்கு சென்றவர்கள், கதிர்காமத்திற்கு கால்நடையாக சென்றிருந்தால், முருகனை தரிசித்த புண்ணியமாவது மிஞ்சியிருக்கும். இப்போது ஒன்றுக்கும் உதவாத நடைபயணத்தை செய்துள்ளார்கள் என கிண்டலடித்துள்ளார் கருணா என அழைக்கப்பட்ட விநாயகமூர்த்தி முரளிதரன்.
அம்பாறை மாவட்டம் காரைதீவு பகுதியில் உள்ள 06 ஆலயங்களின் நிருவாகத்தினருக்கு காசோலைகள் வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனை தெரிவித்துள்ளார்.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரணி தேவையில்லாத ஒன்று. பொத்துவிலில் இருந்து பொலிகண்டிக்கு போகாமல், பொத்துவிலில் இருந்து கதிர்காமம் வரையில் நடந்து சென்றிருந்தால் முருகனை தரிசித்த புண்ணியமாவது கிடைத்திருக்கும் என தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தமிழ் மக்களுக்கு உதவும் இந்த காலகட்டத்தில் இதெல்லாம் தேவையா? கண்டனப் பேரணி தேவையில்லாத ஒன்று என தெரிவித்துள்ளார்.