கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையை எதிர்கொள்வதற்கு நுவரெலியா மாவட்டத்தில் பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள மாணவர்கள் இன்று (01) ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
ஆன்மீக நிலையங்கள் மற்றும் வீடுகளில் இறை வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர் பெற்றோரும், பொறுப்பாளர்களும் பிள்ளைகளை பரீட்சை நிலையங்களை நோக்கி வாழ்த்தி, வழியனுப்பி வைத்தனர்.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு நுவரெலியா மாவட்டத்திலிருந்து இம்முறை 25 ஆயிரத்து 98 மாணவர்கள் தோற்றுகின்றனர். 179 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கொரோனாவினால் பல்வேறு சந்தர்ப்பங்களில் பிற்போடப்பட்ட கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையை சுகாதார வழிகாட்டுதல்களின் இன்று (01.03.2021) ஆரம்பமானது. இதனையொட்டி நேற்று பரீட்சை நிலையங்கள் தொற்று நீக்கம் செய்யப்பட்டது.
–க.கிஷாந்தன்-
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1