29.4 C
Jaffna
April 24, 2025
Pagetamil
இலங்கை

தொற்று எண்ணிக்கை 83,000ஐ கடந்தது!

COVID-19  தொற்றிற்குள்ளான மேலும் 352 பேர் நேற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 83,242 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 346 பேர் மினுவாங்கொட- பேலியகோடா COVID-19 கொத்தணியுடன் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து நான்கு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

மினுவாங்கொட- பேலியகொட COVID-19 கொத்தணி 79,089 ஆக அதிகரித்துள்ளது.

வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய 2 பேரும் நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்ப்பட்டனர்.

3,824 பேர் தற்போது நாடு முழுவதும் 64 வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

COVID-19 தொற்றிலிருந்து குணமடைந்த 574 பேர், நேற்று வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கையை 78,947 ஆக உயர்்துள்ளது. தொற்று சந்தேகத்தில் 401 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.

இதையும் படியுங்கள்

வட்டுவாகல் பாலம் புனரமைப்பு விரைவில் ஆரம்பிக்கும்

Pagetamil

‘எமது பொது எதிரி அரசுதான்… இம்முறை ஜேவிபியின் வித்தைகள் எடுபடாது’: க.வி.விக்னேஸ்வரன்!

Pagetamil

நாளை சில பகுதிகளில் வெப்பநிலை அதிகரிக்கும்

Pagetamil

அரசாங்கம் பாதாள உலகக்குழுக்களை பயன்படுத்தி கொலைகள் செய்கிறதா?: மொட்டுக்கு வந்த சந்தேகம்!

Pagetamil

உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் தேசிய பேரவைக்கே ஆதரவு: யாழ் முஸ்லிம் மக்கள் அறிவிப்பு!

Pagetamil

Leave a Comment