கிழக்கு

சுனாமி பேபியும் பரீட்சைக்கு தோற்றினார்!

நாடு முழுவதும் இன்று (1) ஆரம்பித்த க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் சுனாமி பேபியும் தோற்றுகிறார்.

2004ஆம் ஆண்டு இடம்பெற்ற சுனாமியின் போது தெய்வாதீனமாக உயிர்தப்பிய ஜெயராஜா அபிலாஸ், சுனாமி பேபி என்ற பெயரில் பிரபலமானார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குருக்கள் மடத்தில் தற்போது வசித்து வரும் சுனாமி பேபி அபிலாஸ் இன்று செட்டிபாளையம் மகா வித்தியாலத்தில் க.பொ.த.சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றினார்.

இன்று (01) காலை தனது பெற்றோரின் ஆசிர்வாதத்துடன் ஆலய வழிபாட்டினை பூர்த்திசெய்து மிகவும் உற்சாகத்துடன் தான் பரீட்சைக்கு தோற்றுவதாக அவர் தெரிவித்தார்.

பிறந்த ​​67 நாளில் சுனாமியில் அடித்து செல்லப்பட்ட அபிலாஸ், அலைகளால் அடித்துச் செல்லப்பட்டு 18 மணி நேரம் கழித்து கண்டுபிடிக்கப்பட்டார்.

கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அபிலாஸை 09 தாய்மார்கள் உரிமைகோரினார். நீதிமன்ற உத்தரவுப்படி, டி.என்.ஏ பரிசோதனை  மேற்கொள்ளப்பட்டு அவரது சட்டப்பூர்வ தந்தை ஜெயராஜிடம் ஒப்படைக்கப்பட்டார்.

வைத்தியசாலையில் எண் 81 இலக்க கட்டிலில் அவர் சிகிச்சை பெற்றதன் காரணமாக “சுனாமி பேபி 81” என்று அவருக்கு பெயரிடப்பட்டது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

முள்ளிவாய்க்கால் நினைவுநாள் தடை கல்முனை, சம்மாந்துறையில் விலக்கல்!

Pagetamil

முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சிக்கு கல்முனை நீதிமன்றம் தடைநீக்கம்

Pagetamil

திருகோணமலையில் கைதான 4 தமிழர்களுக்கும் பிணை!

Pagetamil

வாழைச்சேனையில் நாய்கள் காப்பகம்

Pagetamil

கஞ்சித்தடையை நீக்கியது மூதூர் நீதிமன்றம்

Pagetamil

Leave a Comment