Pagetamil
இலங்கை

கிளிநொச்சியில் 5,464 பரீட்சார்த்திகள்!

2020 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரன பரீட்சைக்கு கிளிநொச்சி
கல்வி வலயத்தில் 5464 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.

இதில் 3392  பாடசாலை பரீட்சார்த்திகளும், 2072 தனி பரீட்சார்த்திகளும்
உள்ளடங்குகின்றனர். மேலும்  10 இணைப்பு  நிலையங்களும், 40 பரீட்சை
நிலையங்களும் கிளிநொச்சி கல்வி வலயத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

பரீட்சை்கான அனைத்து ஏற்பாடுகளும் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டு
பரீட்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்தோடு தனிமைப்படுத்தப்பட்ட
வீடுகளிலிருந்து வரும் மாணவர்களுக்காக ஒவ்வொரு பரீட்சை நிலையங்களிலும்
கொவிட் 19 முன் ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  மேலும் கொவிட் 19
தொற்றுக்குள்ளான மாணவர்களுக்கு கிருஸ்ணபுரம் தொற்றுநோயியல்
மருத்துவமனையிலும் பரீட்சை எழுதுவதற்கான ஏற்பாடுகளும்
முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தை பொறுத்தவரை இதுவரை கொவிட் 19 தாக்கம் காரணமாகவோ
அல்லது தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களிலிருந்தோ மாணவர்கள் பரீட்சைக்கு
தோற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்

பிள்ளையானிடம் நடத்தப்படும் விசாரணையில் பல தகவல்கள் வெளிப்படுகிறது!

Pagetamil

மாத்தறை சிறைச்சாலையில் களேபரம்: கண்ணீர்ப்புகை வீச்சு!

Pagetamil

துப்பாக்கிச்சூட்டில் டான் பிரியசாத் உயிரிழக்கவில்லை!

Pagetamil

துப்பாக்கி இயங்காததால் தப்பித்த வர்த்தகர்: துப்பாக்கிதாரி மடக்கிப் பிடிப்பு!

Pagetamil

முழு உலகத்துக்குமான ஆன்மீக தலைவராக பணியாற்றியவர் பாப்பரசர்

Pagetamil

Leave a Comment