கல்முனை பிரதேச செயலாளராக ஜே.லியாக்கத் அலி தனது கடமைகளை கல்முனை பிரதேச செயலகத்தில் இன்று (01) காலை பொறுப்பேற்றுக் கொண்டார்.
அட்டாளைச்சேனை பிரதேச செயலாளராக கடமையாற்றிய இவருக்குக்கான நியமனத்தை அரச சேவைகள் மாகாண சபைகள் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளரினால் வழங்கப்பட்டது. அதனடிப்படையில் இன்று முதல் கல்முனை பிரதேச செயலாளராக கடமை பொறுப்பேற்றார்.
இலங்கை நிர்வாக சேவை முதலாம் தரத்தினை கொண்ட மருதமுனையைச்
சேர்ந்த ஜே.லியாக்கத் அலி காரைதீவு, சம்மாந்துறை பிரதேச செயலகங்களில் உதவி பிரதேச செயலாளராகவும், ஓட்டமாவடி, அட்டாளைச்சேனை ஆகிய பிரதேச செயலகங்களில் பிரதேச செயலாளராகவும், கல்முனை மாநகர சபையில் ஆணையாளராகவும் மிகவும் சிறப்பான முறையில் கடமையாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் இறக்காம பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர், உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர், நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம்.றம்சான், சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம். சாலீஹ், மேலதிக மாவட்ட பதிவாளர் எம்.ரி.எம்.கலீல், கிராம நிர்வாக சேவை உத்தியோகத்தர் யூ.எல். பதிறுத்தீன், பிரதேச ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் கே.எல்.யாஸீன் பாவா உட்பட காரியாலய உத்தியோகத்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.