எல்.பி.எல் தொடரில் ஆட்டநிர்ணய சதி?: 2 முன்னாள் வீரர்களிற்கு நீதிமன்றம் அழைப்பாணை!

Date:

ஹம்பாந்தோட்டையில் நிறைவடைந்த எல்.பி.எல் போட்டியின் போது, ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டதாக கூறப்படும் விசாரணைகளில் ஆஜராகவில்லை என்ற  குற்றச்சாட்டின் கீழ், இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் இருவருக்கு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் நாளை (02)ஆஜராகுமாறு, அவ்விருவருக்கும் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு வீரரர்களின் தவறுகளை தேடியறியும் விசேட பொலிஸ் பிரிவால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமையவே, அவ்விருவரும் நீதிமன்றத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

ஹம்பாந்தோட்டையில் நிறைவடைந்த எல்.பி.எல் போட்டியில் பங்கேற்றிருந்த இலங்கை வீரர்கள் இருவர், இது தொடர்பில் தற்போதைக்கு வாக்குமூலம் அளித்துள்ளது.

எனினும், அந்த சம்பவத்தால் போட்டியில் ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றதா என்பது தொடர்பில் ஆராய்வதற்காகவே விளையாட்டு வீரரர்களின் தவறுகளை தேடியறியும் விசேட பொலிஸ் பிரிவு ஏற்படுத்தப்பட்டது.

அந்த விசேட பொலிஸ் விசாரணைப் பிரிவின் விசாரணைக்குப் பின்னரே, முன்னாள் டெஸ்ட் வீரர்கள் இருவரையும் நீதிமன்றத்துக்கு அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

நீதிமன்றத்துக்கு அழைக்கப்பட்டிருக்கும் வீரர்கள் இருவர், எல்.பி.எல் போட்டியில் பங்கேற்றிருந்த போது, அவ்விருவருக்கும் டுபாயிலிருந்து அவர்களின் கையடக்க தொலைப்பேசிக்கு அழைப்புகள் வந்துள்ளனவென கண்டறியப்பட்டுள்ளது.

அதுதொடர்பில் இவ்விருவராலும் விடுக்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைய, விளையாட்டு வீரரர்களின் தவறுகளை தேடியறியும் விசேட பொலிஸ் பிரிவு, சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழல் மற்றும் மோசடி பிரிவின் உதவியுடன் இந்த விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.

குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருக்கும் இலங்கை டெஸ்ட் அணியின் வீரர்கள் இருவரும் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியுள்ளனர். ஆரம்பத்தில் விசாரணைகளுக்கு ஒத்துழைத்த இவ்விருவரும் தங்களுடைய கையடக்க தொலைபேசி இரண்டையும், சட்டத்தரணிகளின் ஊடாக, பொலிஸ் பிரிவுக்கு ஒப்படைத்துள்ளனர்.

அதன்பின்னர், சட்டத்தரணிகளுடன் விசாரணைக்கு முகங்கொடுப்பதாக அந்தப் பொலிஸ் பிரிவுக்கு பலமுறை அறிவித்துள்ளனர். எனினும், அதனை நிறைவேற்றுவதற்கு அவ்விருவரும் தவறிவிட்டனர்.

அதனையடுத்தே, மேற்படி விவகாரம் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. விளையாட்டு வீரர்களும் நீதிமன்றத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இதில் ஒரு வீரர் ஏற்கனவே ஐ.சி.சியினால் ஊழல் மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, பின்னர் போதிய ஆதாரமில்லாததால் விடுவிக்கப்பட்டவர்.

spot_imgspot_img

More like this
Related

வித்தியா கொலை: சுவிஸ் குமார், கூட்டாளிகளின் மேன்முறையீட்டு மனு விசாரணை நிறைவு!

2015ஆம் ஆண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய யாழ்ப்பாணப் பாடசாலை மாணவி சிவலோகநாதன்...

போதைப்பொருளுடன் சிக்கிய அதிபரின் மனைவியின் பின்னணி

அநுராதபுரம் பகுதியில் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபரின் மனைவி, தேசிய...

நியூயோர்க் விரைவில் கம்யூனிசமாக மாறும்: ட்ரம்ப்

நியூயார்க் மக்கள் இடதுசாரி ஜோஹ்ரான் மம்தானியை அடுத்த மேயராகத் தேர்ந்தெடுத்த பிறகு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்