26.6 C
Jaffna
December 9, 2024
Pagetamil
உலகம்

ஊழல் வழக்கில் முன்னாள் பிரான்ஸ் ஜனாதிபதி சார்கோஸிக்கு சிறைத்தண்டனை!

பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோஸி குற்றவாளியென தீர்ப்பளித்த அந்நாட்டு நீதிமன்றம்,

ஊழல் வழக்கில் பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி சர்கோஸிக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் உள்ளதால் அவர் குற்றவாளி என்று பாரீஸ் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இதில் சர்கோஸிக்கு மூன்று ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தண்டனையில் இரண்டு ஆண்டுகள் இரத்து செய்யப்பட்டு அவருக்கு ஓராண்டு விதிக்கப்பட்டுள்ளது.

இந்த ஓராண்டு சிறைத் தண்டனையை சர்கோஸி நிபந்தனைளுடனே அனுபவிக்க உள்ளார். இந்த நிபந்தனைகளில் வீட்டுக் காவல் உள்ளிட்டவையும் அடங்கும்.

இந்த தண்டனையை எதிர்த்து சர்கோஸி மேல்முறையீடு செய்வார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதியாக 2007 முதல் 2012 வரை பதவி வகித்தவர் நிக்கோலஸ் சர்கோசி. 2007இல் நடந்த ஜனாதிபதி தேர்தலின்போது இவருக்கு லிபியா நாட்டிலிருந்து முறைகேடாக நிதி வந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

லிபியா வின் முன்னாள் ஜனாதிபதி கடாபி உள்ளிட்டோர் இந்த நிதியை சர்கோசிக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும் கோரமானவை என்றும் சர்கோஸி கூறியுள்ளார்.

இதுதொடர்பான விசாரணை 2013ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. ஆனால் விசாரணை ஆணையம் யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் குறித்து விசாரணை நடத்தியது. ஆனால் கடாபி மூலம், சர்கோசிக்கு 5 கோடி யூரோக்கள் வந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

கடந்த 2011இல் கடாபியின் மகன் அளித்த பேட்டி மூலம் சர்கோஸி பணம் பெற்றது தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சிரியா ஜனாதிபதி மொஸ்க்கோவில் தஞ்சம்

east pagetamil

14 வயது சிறுவனால் வரையப்பட்ட ஓவியம் – கவிழ்க்கப்பட்டது சிரியா ஆட்சி

east pagetamil

சிரியா முன்னாள் ஜனாதிபதி அசாத் பற்றிய மர்மம் விலகியது: ரஷ்யா புகலிடம் அளித்துள்ளது!

Pagetamil

சிரிய ஜனாதிபதியின் கதி என்ன?

Pagetamil

சிரியா தலைநகரும் கிளர்ச்சியாளர்களிடம் வீழ்ந்தது: அசாத் குடும்பத்தின் 50 ஆண்டுகால ஆட்சி முடிந்தது!

Pagetamil

Leave a Comment