ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) கட்சியின் மன்னார் மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் மன்னாரில் உள்ள ஈ.பி.ஆர்.எல்.எப் அலுவலகத்தில் கட்சியின் மாவட்ட அமைப்பாளரும், மன்னார் நகர சபையின் உறுப்பினருமான எஸ்.ஆர்.குமரேஸ் தலைமையில் இடம் பெற்றுள்ளது.
இதன் போது பல்வேறு விடையங்கள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளதாக கட்சியின் மாவட்ட அமைப்பாளரும்,மன்னார் நகர சபையின் உறுப்பினருமான எஸ்.ஆர்.குமரேஸ் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) கட்சியின் மன்னார் மாவட்ட செயற்பாட்டுக்குழு கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இடம் பெற்றது.
இதன் போது கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களான ஏ. யூட் குரூஸ், பீற்றர் மடுத்தீன் உற்பட கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டு இருந்தனர்.
குறித்த கூட்டத்தில் பல்வேறு விடையங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.
குறிப்பாக கட்சிகளின் ஒன்றினைவு தொடர்பாகவும், கூட்டாக மாவட்டத்தில் இடம் பெறுகின்ற சகல விதமான நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ஆதரவு வழங்குவது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
குறிப்பாக தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முன்னெடுக்கின்ற சகல போராட்டங்களுக்கும் ஈ.பீ.ஆர்.எல்.எப் கட்சி பூரண ஒத்துழைப்பை வழங்குவது தொடர்பாகவும் ஆரயப்பட்டது.
மேலும் எதிர் வரும் தேர்தல்களின் போது கட்சி தனியாக அல்லது கூட்டாக போட்டியிடுவது தொடர்பாக ஆராயப்பட்டதோடு,கட்சியின் ஏனைய உறுப்பினர்களையும் அழைத்து பல்வேறு விடையங்கள் தொடர்பாக ஆராய்வது என முடிவுகள் மேற்கொள்ளப்பட்டது.என அவர் மேலும் தெரிவித்தார்.