ஆங் சான் சூகி மீது மேலும் பல குற்றச்சாட்டுக்கள்!

Date:

மியான்மர் இராணுவத்தினரால் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகி மீது மேலும் இரண்டு குற்றச்சாட்டுகள் பதிவாகியிருப்பதாக அவரது சட்டத்தரணி இன்று (1) தெரிவித்தார்.

மியான்மர் தலைநகர் நெப்பிடாவில் உள்ள நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட வழக்கு விசாரணையில் காணொளி மூலம் சூகி முன்னிலைப்படுத்தப்பட்டார்.

தமது சட்டத்தரணிகளைச் சந்திக்க அவர் நீதிமன்றத்திடம் அனுமதி கேட்டதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

மியான்மரில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை அந்நாட்டு இராணுவம் பெப்ரவரி 1ஆம் திகதியன்று கவிழ்த்தது. சூகியையும் மற்ற தலைவர்களையும் இராணுவம் தடுப்புக்காவலில் வைத்துள்ளது. அன்றிலிருந்து சூகியை யாரும் பார்க்கவில்லை.

“சூகியை நான் காணொளியில் பார்த்தேன். அவர் பார்ப்பதற்கு நலமாக இருக்கிறார்,” என்று சூகியின் சட்டத்தரணி மின் மின் சோ தெரிவித்தார்.

ஆறு தொலைபேசிகளை சட்டவிரோதமான முறையில் மியான்மருக்குள் கொண்டு வந்ததாக சூகி மீது முதலில் குற்றம் சுமத்தப்பட்டது. ஆனால் அதன் பிறகு கொரோனா கிருமித்தொற்று விதிமுறைகளை மீறியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

சூகி மீது பிரிட்டிஷ் காலனித்துவ காலக்கட்டத்தில் நடைமுறையில் இருந்த சட்டத்தின்கீழ் மேலும் ஒரு குற்றச்சாட்டு இன்று பதிவானது. பொதுமக்களிடையே பயம் அல்லது பதற்றத்தை ஏற்படுத்தும் தகவலைப் பரப்பியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

தொலைத்தொடர்பு சட்டத்தின்கீழ் சூகிக்கு எதிரான மேலும் ஒரு குற்றச்சாட்டு பதிவாகியிருப்பதாக மின் மின் சோ கூறினார்.

இந்த வழக்கு விசாரணை இம்மாதம் 15ஆம் திகதியன்று தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பரந்தன்- முல்லை வீதி இந்திய பாலத்தில் கனரக வாகனங்கள் பயணிக்க தடை!

பரந்தன் முல்லைத்தீவு வீதியிலுள்ள இல. 11/1 (இந்தியன் பாலம்) பாலத்தினூடாக கனரக...

புகையிரத திணைக்கள வேலைநிறுத்தம் வாபஸ்

நேற்று நள்ளிரவில் தொடங்க திட்டமிடப்பட்டிருந்த லோகோமோட்டிவ் இயக்க பொறியாளர்கள் சங்கத்தால் திட்டமிடப்பட்ட...

‘இதற்கு சட்டத்தில் இடமில்லை’: இரண்டு பொலிசாரையும் பிணையில் விடுவித்த நீதிமன்றம்!

பொலிஸ் திணைக்களத்தின் நற்பெயரைப் பாதுகாப்பதற்கும், ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு முன்மாதிரியாக இருப்பதற்கும்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்