அழிந்து போனதாக கருதப்பட்ட கருப்பு நிற கண்கள் கொண்ட பப்லர் பறவை, 170 ஆண்டுகளுக்கு பின் முதன்முறையாக இந்தோனேஷியாவில் தென்பட்டுள்ளது.
இந்தோனேஷியாவின் போர்னியோ மழைக்காடுகளில் 170 ஆண்டுகளுக்கு முன்பு கருப்பு கண்களை கொண்ட பப்லர் பறவை இனம் வாழ்ந்த வந்தது. கடைசியாக 1848 ஆம் ஆண்டு காணப்பட்டதாக ஆவணப்படுத்தப்பட்ட இந்த பறவை, அதன் பின் யார் கண்ணிலும் படவில்லை. அதனை கண்டுபிடிக்க எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது.
இதனால் அந்த பறவையினம் அழிந்து போனதாக கருதப்பட்டது. அழிந்து போன பறவையினங்களில் அதுவும் பட்டியல்ப்படுத்தப்பட்டு விட்டது.
இந்நிலையில், கடந்த ஆண்டு போர்னியோவின் மழைக்காடுகளில் இந்த பறவையினம் மீள கண்டறியப்பட்டுள்ளது.
முஹம்மது சுரான்டோ மற்றும் முஹம்மது ரிஸ்கி என்ற இருவர் காட்டுக்குள் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த போது, வித்தியாசமான பறவையினம் என கருதி அதை பிடித்து படம் எடுத்து விட்டு பறக்க விட்டுள்ளனர். எனினும், அது பப்லர் பறவையென்பது அவர்களிற்கு தெரியாது.
அந்த புகைப்படம் வெளியாகி, அது பறவை கண்காணிப்பு குழுவின் கண்ணில் பட்டபின்னர்தான், அந்த பறவை பற்றிய தகவல் வெளியானது.
“இது போன்ற கண்டுபிடிப்புகள் நம்பமுடியாதவை. பல தசாப்தங்களாக அல்லது அதற்கு மேலாக காணாமல் போன பிற உயிரினங்களையும் கண்டுபிடிக்க முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது’’ என உலக வனவிலங்கு பாதுகாப்புஅமைப்பும் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
Now that’s the sort of thing I want to see first thing in the morning. Read all about it in the latest edition of Birding Asia the bulletin of the Oriental Bird Club @orientbirdclub Black-browed Babbler rediscovered after 170 years. pic.twitter.com/QpySkOeaZa
— Ashley Banwell (@AshBanwell) February 25, 2021