கேரளாவை போலவே, கோவையும் அழகிகள் தேசமாகி வருகிறதோ என எண்ணத் தோன்றுகிறது. தற்போதைய புதுமுக நடிகைகள் நிறைய பேர் கோவையில் இருந்து வந்தவர்கள். குக் வித் கோமாளி பவித்ரா, தர்ஷா குப்தா, சாய் பல்லவி என நீளும் வரிசையில் முதல் மொய் வைத்தவர் அதுல்யா ரவி. காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் அறிமுகமானவர்,
அதன்பின், நாகேஷ் திரையரங்கம், நாடோடிகள் 2, கேப்மாரி, அடுத்த சாட்டை போன்ற படங்களில் நடித்தார்.
நடிப்பிலும், அழகிலும் முன்பைவிட தற்போது மெருகேறி இருக்கும் அதுல்யா ரவிக்கு, தற்போது அதிக படங்கள் குவிந்து வருகிறது.
போதாதற்கு, படத்திற்கு படம் கவர்ச்சியின் எல்லைகளை குறைத்துக் கொண்டே போவதால், ரசிகர்களும் உற்சாகமாக இருக்கிறார்கள்.
கேப்மாரி படத்தில் முரட்டு கவர்ச்சி காட்டியிருந்தார்.
சமூக வலைதளங்களில் அடிக்கடி புகைப்படங்களை பதிவேற்றி வரும் அதுல்யா, தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளை பாடாய்ப் படுத்தி வருகிறார்.
தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் அவர் வெள்ளை நிற டிசர்ட் அணிந்துள்ளார். அதில் முத்த ஸ்மைலி இருக்கிறது. குசும்பர்கள் “அங்க யாரு முத்தம் வைத்தது” என அவரது சமூக ஊடகங்களில் அக்கப்போர் செய்து கொண்டிருக்கிறார்கள்.